இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்! 'க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்' ஆப்ஷனில் கூடுதல் வசதிகள் அறிமுகம்!
க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் அம்சத்தின் மூலம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மற்றும் நோட்ஸ் பதிவுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே பார்க்கும் வசதி இருக்கிறது. அப்போது போஸ்ட் மற்றும் ரீல்ஸ் பதிவுகளும் இந்த அம்சத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராம் பயனர்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டும் தங்கள் பதிவுகளைப் பார்க்க அனுமதிக்கும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் (close friends) அம்சம் உள்ளது. இந்த அம்சத்தின் மூலம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மற்றும் நோட்ஸ் பதிவுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே பார்க்கும் வசதி இருக்கிறது.
இப்போது, இன்ஸ்டாகிராம் போஸ்ட் மற்றும் ரீல்ஸ் பதிவுகளும் இந்த க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் அம்சத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
மெட்டாவின் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் 2018ஆம் ஆண்டில் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அம்சம் பயனர்கள் தேர்ந்தெடுத்த நண்பர்கள் கொண்ட குழுக்களுடன் மட்டும் பதிவுகளைப் பகிர உதவியது. குறிப்பாக தங்களைப் பின்தொடர்பவர்கள் அனைவரும் பார்க்க முடியாது என்பது இந்த அம்சத்தின் தனித்துவமான வசதியாக இருக்கிறது.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் சேனல் பதிவில் இந்த புதிய அப்டேட் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
மெட்டாவுக்குச் சொந்தமான மற்றொரு பிரபலமான சமூக வலைத்தளமான பேஸ்புக், நீண்ட காலமாகவே இதுபோன்ற வசதியை வழங்கிவருகிறது. இந்த வசதியை பயன்படுத்துவதன் மூலம் பயனர்களின் நண்பர்கள் பட்டியலில் உள்ள சில நபர்கள் மற்றும் குழுக்கள் மட்டும் பதிவுகளைப் பார்க்க முடியாதபடி தடைசெய்யப்பட்டிருக்கும்.
க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
பதிவுகளை நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் பகிர, பதிவுகளை பப்ளிஷ் செய்வதற்கு முன் ஆடியன்ஸ் ஆப்ஷனில் close friends என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். பின் பதிவை பப்ளிஷ் செய்தால் அந்தப் பதிவை நெருங்கிய நண்பர்கள் மட்டும் பார்க்க முடியும். நெருங்க நண்பர்கள் பட்டியலில் யாரெல்லாம் இருக்கவேண்டும் என்பதை முன்கூட்டியே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.