இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,28,859ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 16,000ஐ கடந்துள்ளது. 

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 19,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 5,28,859ஆக உயர்ந்துள்ளது. 2,03,051 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,09,713 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 410 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 16,095 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமான பாதிப்பில் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருந்து வருகிறது. மகாராஷ்டிராவில் 1,59,133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 84,245ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,273ஆக உயர்ந்துள்ளது. 2வது 80,188 பேர் பாதிப்பு மற்றும்  2,558 உயிரிழப்புடன் டெல்லி 2வது இடத்தில் உள்ளது. 78,335 பேர் பாதிப்பு 1025 உயிரிழப்புடன் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. 4வது இடத்தில்  குஜராத்தும், 5வது இடத்தில் உத்தரபிரதேசமும் இருந்து வருகிறது.