பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்குமா? பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி சொன்ன பதில்..
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று ஊடகங்களில் வெளியான தகவலை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மறுத்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லை. இந்த சூழலில் இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த தகவல்கள் தவறானவை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று வெளியாக உள்ள அனைத்து தகவல்களும் தவறானவை. இது போன்ற எந்தவொரு பிரச்சினையிலும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுடன் இது போன்ற எந்த விவாதமும் இல்லை என்பதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன்" என்று தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது? ஆம் ஆத்மி அமைச்சர்கள் அதிர்ச்சி தகவல்..
மேலும் "நாம் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையில் இருக்கிறோம். உலகில் இரண்டு குறிப்பிட்ட பகுதிகளில் மோதல் சூழ்நிலைகள் உள்ளன. அதே நேரத்தில் செங்கடலில் கப்பல் போக்குவரத்து சவால்களை உள்ளன. இது உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் 12 சதவீதத்திற்கு பங்களிக்கிறது.
2023ல் 4-8 சதவீத எல்என்ஜி சரக்கு இந்த வழியாக சென்றது. மேலும் ஒரு நாளைக்கு 8.2 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இந்த வழியாக வருகிறது. ஆனால் தடை செய்தால், அது ஏற்படுத்தும் தாக்கத்தை நீங்கள் பார்க்கலாம்" என்று அமைச்சர் கூறினார். .
ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் வாரத்தின் தொடக்கத்தில் சுமார் $2 உயர்ந்தன. செவ்வாயன்று அவர்கள் இரண்டு கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை தெற்கு செங்கடலில் வீசினர், இருப்பினும் சேதம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
மத உணர்வை காயப்படுத்துகிறார்கள்: இந்தியா கூட்டணி குறித்து பிரதமர் மோடி குற்றச்சாட்டு
தெற்காசியாவில் உள்ள நமது அண்டை நாடுகளில் டீசல் விலை 40 முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.மேற்கத்திய தொழில்துறை பகுதியைப் பார்த்தால் அங்கு விலை அதிகரித்துள்ளது.. ஆனால் இங்கு விலை குறைந்துள்ளது என்று ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார். மேலும் “ தொலைநோக்கு தலைமையின் காரணமாக எங்களால் இதைச் செய்ய முடிகிறது. நவம்பர் 2021 மற்றும் மே 2022 ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில் மத்திய கலால் வரி குறைக்கப்பட்டது , நாங்கள் அதை 2023 இல் செயல்படுத்தினோம்," என்று அமைச்சர் கூறினார்.