2024 மக்களவை தேர்தலில் மோடி மேஜிக் வெல்லுமா? கருத்துக்கணிப்பு முடிவுகள் என்ன சொல்கின்றன?

டைம்ஸ் நவ் மற்றும் ETG ரிசர்ச் நடத்திய கணக்கெடுப்பின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 296 முதல் 326 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Will Modi Magic Win 2024 Lok Sabha Elections? What do the survey results say?

2024 மக்களவைத் தேர்தலுக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், டைம்ஸ் நவ் மற்றும் ETG நடத்திய கருத்துக் கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. டைம்ஸ் நவ் மற்றும் ETG ரிசர்ச் நடத்திய கணக்கெடுப்பின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 296 முதல் 326 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 160 முதல் 190 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கணிக்கப்பட்ட இடங்கள் குறைந்தாலும், பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. கட்சி வாரியாக பாஜக 288 முதல் 314 இடங்களிலும், காங்கிரஸ் 62 முதல் 80 இடங்களிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கருத்துக்கணிப்பின்படி, தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றும் வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் ETG கணக்கெடுப்பின்படி, ராஜஸ்தானில் தேசிய ஜனநாயக கூட்டணி 19 முதல் 22 இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி (இதற்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணியாக இருந்தது) ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 2 முதல் 9 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தானில் மொத்தம் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன.

இந்தியா தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் உலகளாவிய சாம்பியனாக உள்ளது : மத்திய அமைச்சர் பெருமிதம்

2018ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 25 இடங்களையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது. பாஜக மொத்தம் 24 இடங்களிலும், ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

இதனிடையே ராஜஸ்தான் மநில சட்டப்பேரவைக்கு ராஜஸ்தான் தனது அடுத்த அரசாங்கத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் டிசம்பரில் வாக்களிக்க உள்ளது. தேர்தல்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சாதகமாக செயல்பட்டால், காங்கிரஸ் ஆளும் மாநிலமாக உள்ள ராஜஸ்தானில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற முடியும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios