'கையை வெட்டுவோம்': எச்சரிக்கையை மீறி, ஹரியானா மகாபஞ்சாயத்தில் வெறுப்பு பேச்சு
வெறுக்கத்தக்க பேச்சுக்களை யாரும் பேசக்கூடாது என்று எச்சரித்திருந்த நிலையில், ஹரியானா மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பேசியவர்கள் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியுள்ளனர்.
வெறுப்புப் பேச்சைத் தவிர்க்க வேண்டும் என காவல்துறை நிபந்தனை விதித்திருந்தபோதிலும், ஹரியானாவில் நடந்த மகா பஞ்சாயத்துக் கூட்டத்தில் பேச்சாளர்கள் "கைகளை வெட்டுவோம்" என்று நேரடியாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளனர். அங்கிருந்த போலீசார் பேச்சாளர்கள் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேச வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
கடந்த மாதம் நூஹ் கலவரத்திற்குப் பின், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஊர்வலத்தில் மீண்டும் நடத்தி நிறைவு செய்வது பற்றி பேசுவதற்காக பல்வால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மகாபஞ்சாயத்து கூட்டம் கூட்டப்பட்டது. மகாபஞ்சாயத்தின் போது, ஜூலை 31ஆம் தேதி நூஹில் நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கலவரம் தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு நடத்தக் கூடாது என்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடியும், அரசு வேலையும் கொடுக்க வேண்டும்; காயமடைந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
பீகாரில் நர்ஸ் கூட்டு பலாத்காரம்... கொலை செய்து ஆம்புலன்சில் மறைத்து வைத்த மருத்துவர்
மகாபஞ்சாயத்து முதலில் நூஹில் நடைபெறத் திட்டமிடப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதால், 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்வாலுக்கு மாற்றப்பட்டது. பின்னர், பல்வால்-நுஹ் எல்லைக்கு அருகில் உள்ள பாண்டிரி குக்கிராமத்தில் கூட்டத்தை நடத்த சர்வ இந்து சமாஜம் அமைப்பிற்கு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
"வெறுக்கத்தக்க பேச்சுக்களை யாரும் பேசக்கூடாது. யாராவது அப்படிப் பேசினால் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும். ஆயுதங்கள், தடிகள் அல்லது தீப்பற்றக்கூடிய எந்தப் பொருளையும் யாரும் கொண்டுவரக் கூடாது" என்று பல்வால் காவல் கண்காணிப்பாளர் லோகேந்திர சிங் கூறியிருந்தார்.
இதனிடையே, பல விவசாய அமைப்புகள் மற்றும் காப் பஞ்சாயத்துகள் அமைதியை நிலைநாட்ட அழைப்பு விடுத்துள்ளன. பசு பாதுகாவலர் என்று கூறிக்கொண்டு அட்டீழியம் செய்யும் மோனு மனேசர் பங்கேற்றதுதான் ஜூலை 31ஆம் தேதி பேரணியில் வன்முறை ஏற்படக் காரணம் என்றும் அவரை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாலையில் திருவனந்தபுரம் ஏசியாநெட் அலுவலகத்தில் புகுந்து சூறையாடிய நபர் கைது