Asianet News TamilAsianet News Tamil

அவங்களுக்கு எதுக்கு Y Plus பாதுகாப்பு?.. கேள்வி எழுப்பிய சுப்ரமணியன் சாமி - தக்க பதில் கொடுத்த நடிகை கங்கனா!

நடிகை கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்படும் Y Plus குறித்து சர்ச்சையான ஒரு கேள்வியை கேட்டிருந்த சுப்ரமணியன் சாமி. தற்போது அவர் போட்ட டீவீட்டுக்கு பதில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் நடிகை கங்கனா.
 

Why Y Plus Security for Actress Kangana asks Subramanian Swamy and here is what kangana replies back
Author
First Published Jul 31, 2023, 6:50 PM IST

பிரபல நடிகை கங்கனா, தன்னை டேட்டிங் செய்வதற்காக சில பிரபல பாலிவுட் நடிகர்கள், Fake ID மூலம் தன்னை தொடர்புகொள்ள நினைப்பதாக குற்றம்சாட்டினார். இந்த விஷயம் ஹாலிவுட் உலகில் புயலை கிளப்பிய நிலையில், "ஹிருத்திக் ரோஷன் மற்றும் ரன்பீர் கபூரை ஒவ்வொரு முறையும் விமர்சித்து வந்த கங்கனா ரனாவத் எங்கே"? என்று கேட்டு ஒருவர் ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். 

அதற்கு பதில் அளித்த சுப்ரமணியன் சாமி, அவர் எங்கிருக்கிறார் என்பது சிறப்பு பாதுகாப்புக் குழுவுக்கு (SPG) மட்டுமே தெரியும் என்றும், மேலும், கங்கனா ரணாவத்துக்கு அளிக்கப்பட்டுள்ள Y Plus பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பினார். பாலிவுட் நடிகர்களை கண்காணிப்பது எஸ்பிஜியின் வேலை அல்ல, அப்படி இருந்தும் கங்கனாவுக்கு இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது ஆச்சரியமாக உள்ளது என்றும் அவர் கூறினார். 

பத்ரி சேஷாத்ரியை உடனே விடுதலை செய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கடிதம்

அவருடைய டீவீட்டுக்கு சட்டென்று பதில் அளித்த கங்கனா "நான் ஒரு பாலிவுட் நட்சத்திரம் மட்டுமல்ல சார், நான் ஏழைகளுக்கு ஆதரவான மற்றும் அக்கறையுள்ள ஒரு குடிமகள். மகாராஷ்டிராவில் சில அரசியல்வாதிகள் எனக்கு எதிராக உள்ளனர். நான் துக்டே கும்பலைப் பற்றி பேசியுள்ளேன், காலிஸ்தானி குழுக்களை கடுமையாக கண்டித்துள்ளேன்". 

"நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர், எனது அடுத்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசவுள்ளேன், ஆகவே என் உயிருக்கு பெரிய அளவில் அச்சுறுத்தல் உள்ளது, ஆகவே பாதுகாப்பை வேண்டினேன், அது கிடைத்துள்ளது, இதில் ஏதாவது தவறு இருக்கிறதா சார் ?" என்று அந்த பதிவில் கேட்டுள்ளார். 

சிவசேனா தலைவர் சஞ்சய் உடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு, பாதுகாப்பற்ற உணர்வை உணர்ந்த கங்கனாவிற்கு உள்துறை அமைச்சகத்தால் (MHA) சிஆர்பிஎஃப் ஒய்-பிளஸ் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை மன்னிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios