Asianet News TamilAsianet News Tamil

கொல்கத்தா மருத்துவர் வழக்கு: யூடியூபர் துருவ் ரத்தியின் பதிவுக்கு நெட்டிசன்கள் கண்டனம்!

கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவரை 'நிர்பயா 2' என குறிப்பிட்டதும், பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் துருவ் ரத்தி மீது கடும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

Why Dhruv Rathee is being slammed for his video on Kolkata doctor rape-murder case sgb
Author
First Published Aug 15, 2024, 3:41 PM IST | Last Updated Aug 15, 2024, 3:44 PM IST

பிரபல யூடியூபர் துருவ் ரத்தி கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்ததால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார். சமூக ஊடகங்களில் அவருக்கு கண்டனங்கள் அதிகரித்துள்ளது.

முதலில் இந்த வழக்கு தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்ட துருவ், பின்னர் அதை நீக்கிவிட்டார். பிறகு ஒரு வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளிப்படுத்தினார் என்று அவரை நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

கொல்கத்தா மருத்துவரின் வழக்கைக் குறிப்பிடும் வகையில் துருவ் ரதி, "Justice For Nirbhaya 2" என்ற ஹேஷ்டேக்குடன் எக்ஸில் பதிவிட்டபோதுதான் சர்ச்சை தொடங்கியது. பலர் துருவ் ரத்தி மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்துவிட்டதாக பலர் குற்றம்சாட்டினர். இதனால் பின்விளைவுகளைத் தவிர்ப்பதற்காக அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.

செவ்வாய்க் கிரகத்தில் மறைந்திருக்கும் பெருங்கடல்! மனித குடியேற்றம் சாத்தியமா?

பின்னர், அந்தப் பதிவை நீக்கியதற்கான காரணத்தையும் துருவ் ரத்தி விளக்கி இருக்கிறார். கொல்கத்தா வழக்கை நிர்பயா வழக்குடன் ஒப்பிடுவது தவறு என்று பலர் கருத்து கூறினர் என்றும், கொல்கத்தா வழக்கில் பாதிக்கப்பட்டவரை நிர்பயா 2 என்று அழைப்பது சரியல்ல என்றும் சுட்டிக்காட்டினார்கள் என்றும் யோசித்துப் பார்த்தபோது,  அவர் கூறுவது சரி என்று உணர்ந்ததாகவும் துருவ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த இன்னொரு பதிவில், பாதிக்கப்பட்டவரின் பெயரை உள்ளடக்கிய ஹேஷ்டேக்கை பயன்படுத்தியதால், மீண்டும் சர்ச்சையில் மாட்டிக்க்கொண்டார். பாலியலன் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிடுவது சட்டவிரோதமானது என்று பலரும் விமர்சித்தனர்.

இந்தியாவில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது உறவினர்களின் பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கண்ணியம் மற்றும் தனியுரிமையை பாதுகாக்க இந்தக் கட்டுப்பாடு உள்ளது.

யார் இந்த ராகுல் நவீன்? எதிர்க்கட்சிகளை மிரட்டும் அமலாக்கத்துறை இனி இவர் கையில்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios