அமைச்சரை அலறவிடும் அமலாக்கத்துறை உருவானது எப்படி? அதன் அதிகாரங்கள் எவை?

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கண்ணீர் விட்டுக் கதற அவரை கைது செய்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமலாக்கத்துறை எப்பது என்ன? அதன் அதிகாரங்கள் என்னென்ன? என்பதை அறிந்துகொள்ளலாம்.

When was the Enforcement directorate formed? What are its powers and limits?

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சக்திவாய்ந்த புலனாய்வு நிறுவனங்களில் ஒன்று அமலாக்கத்துறை. சிபிஐ எனப்படும் புலனாய்வு அமைப்பும் இதேபோல மத்திய அரசின் கீழ் இயங்கிவருகிறது. தற்போது தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கதறிவிட்டுக்கொண்டிருப்பதால் அமலாக்கத்துறை என்றால் என்ன, அதற்குரிய அதிகார வரம்பு என்ன என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளன.

1956ஆம் ஆண்டு மே மாதம் அமலாக்கப் பிரிவு உருவானது. அந்நியச் செலாவணி மோசடி சட்டம், 1999 (FEMA), பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (PMLA) ஆகிய நிதிச் சட்டங்களை செயல்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்புதான் அமலாக்கப் பிரிவு. அது பிறகு அமலாக்க இயக்குநரகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வெட்கமாக இல்லையா? செந்தில் பாலாஜியை தூக்கி எறியுங்கள்: நாராயணன் திருப்பதி ஆவேசப் பேச்சு

தலைநகர் டெல்லியில் அமலாக்கத்துறை இயக்குநகரகத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. மும்பை, சென்னை, சண்டிகர், கொல்கத்தா மற்றும் டெல்லி என  ஐந்து பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. இவை சிறப்பு இயக்குநர்களால் வழிநடத்தப்படும். மண்டல அலுவலகங்கள் அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், சென்னை, கொச்சி, டெல்லி, பனாஜி, கவுஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜலந்தர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, பாட்னா ஸ்ரீநகர் போன்ற நகரங்களில் உள்ளன. இவை இணை இயக்குநருக்குக் கீழ் செயல்படுபவை.

When was the Enforcement directorate formed? What are its powers and limits?

பொருளாதாரம் தொடர்பான சட்டங்களை செயல்படுத்துவது, பொருளாதாரக் குற்றத்தைத் தடுப்பது போன்றவை அமலாக்கத்துறையின் தலையாய பணிகள். பொருளாதாரச் சட்டத்தை அமல்படுத்துவதன் காரணமாகவே இதற்கு அமலாக்கத்துறை என்று பெயர் சூட்டப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம்; தூக்கத்தை இழந்து பீதியில் உறைந்த பொதுமக்கள்

1960ஆம் ஆண்டு அமலாக்கத்துறையின் நிர்வாக அதிகாரங்கள் பொருளாதார விவகாரங்கள் துறையிலிருந்து வருவாய்த்துறைக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டன. 1973 முதல் 1977 வரை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையால் நிர்வகிக்கப்பட்டது. இப்போது அமலாக்கத்துறை இயக்குநரகம் நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறையின் கீழ் உள்ளது.

அமலாக்கத்துறை இயக்குநரகம் செயல்படுத்தும் அந்நியச் செலாவணி மோசடி சட்டம், 1999 (FEMA), பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (PMLA)  ஆகிய இரண்டில் FEMA சிவில் சட்டம். அந்நியச் செலாவணி பரிவர்த்தனை கட்டுப்பாட்டு சட்டங்கள் மற்றும் விதிகளை மீறும் குற்றவாளிகளுக்கு தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத்தரும் அதிகாரம் அமலாக்கத்துறை வசம் உள்ளது.

When was the Enforcement directorate formed? What are its powers and limits?

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 103 பேர் பலி! சிறிய படகில் 300 பேர் ஏறியதால் விபரீதம்

பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (PMLA) என்பது கிரிமினல் சட்டமாகும். அமலாக்கத்துறை இயக்குநரகம் பணமோசடியில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடுப்பது, குற்றச் செயல்கள் மூலம் ஈட்டிய சொத்துக்களை கண்டறிதல், தற்காலிகமாகப் பறிமுதல் செய்வதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தவும் முடியும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய முடியும். பணமோசடி செய்துவிட்டு, இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடியவர்களை  வழக்குகளை அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரிக்கும். அவர்கள் வெளிநாடுகளில் பதுக்கி இருக்கும் பணத்தை மீட்பதற்கு அந்தந்த நாடுகளின் உதவியையும் கோரி, அமலாக்கத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.

மணிப்பூரில் மீண்டும் கலவரம்; 9 பேர் உயிரிழப்பு; விடுப்பில் இருக்கும் போலீசாருக்கு அழைப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios