மத்திய பாதுாப்புத்தறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை கொல்வதற்காக வாட்ஸ்அப் மூலம் திட்டம் தீட்டிய இருவரை உத்தரகாண்ட் போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

இது குறித்து பிதோரகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராமசந்திர ராஜ்குரு கூறியதாவது: பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, உத்தரகாண்ட் மாநிலம், தார்ச்சுலா நகரில் ராணுவம் சார்பில் மருத்துமுகாமுக்கு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த முகாமை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி அளவில் எங்களக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது அவரை கொல்வதற்கு வாட்ஸ் அப் மூலம் இருவர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து. அந்த எண்களை கண்காணித்தோம், அந்த உரையாடலில் நாளை இங்குவரும் நிர்மலா சீதாராமனை சுட்டுக்கொல்வேன், இதுதான் அவரின் கடைசிநாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதையடுத்து, அந்த வாட்ஸ்அப் எண்ணை கண்கானித்து அந்த எண்ணை பயன்படுத்திய இருவரை கைது செய்தோம். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் மதுபோதையில்  பேசியதாக தெரிவித்தனர். ஆனால், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இருவர் மீதும் ஐபிசி 506, 66 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இவர்கள் மீது இதற்கு முன் வழக்கு உள்ளதா, குற்றப்பின்னனி உள்ளவர்களா என்பது குறித்தும், ஆயுதங்கள் ஏதும் பதுக்கி இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்தார்.