Asianet News TamilAsianet News Tamil

என்ன செய்தாலும் இனி ஆட்சியை காப்பாற்ற முடியாது... முதல்வரை கதற விடும் பாஜக..!

இது பாஜகவுக்குத் தான் பயனளிக்கும். கூட்டணி அரசை காப்பாற்றுவதில் அவர் வெற்றி பெற மாட்டார். திங்கட்கிழமை வரை காத்திருப்போம்’’ என அவர் தெரிவித்தார். 

Whatever you do, you can no longer save the regime ...
Author
Tamil Nadu, First Published Jul 13, 2019, 4:44 PM IST

கர்நாடக சட்டசபையில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் குமாரசாமி கேட்டுக்கொண்டதை பாஜக தலைவர் எடியூரப்பா வரவேற்றுள்ளார்.

Whatever you do, you can no longer save the regime ...

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்- தேமஜ கட்சிகளின் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருப்பது அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் தனது அரசு வெற்றி பெறும் என முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நேரம் ஒதுக்கும்படி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். Whatever you do, you can no longer save the regime ...

அவரது இந்த முடிவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா வரவேற்றுள்ளார்.  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ஊழல் மற்றும் பயனற்ற கூட்டணி அரசால் கர்நாடக மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இதன் காரணமாகத்தான், இரண்டு கூட்டணி கட்சிகளில் இருந்தும் பல எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் சில அதிருப்தி எம்எல்ஏக்கள் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Whatever you do, you can no longer save the regime ...

சட்டசபையில் குமாரசாமி, தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரியிருக்கிறார். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. வாக்கெடுப்பை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எப்படியும் அடுத்த சில தினங்களில் இந்த அரசு கவிழும். மெஜாரிட்டியை இழந்துவிட்ட பிறகும், குமாரசாமி அரசியல் சதியை தூண்டிவிடுகிறார். எந்த அர்த்தமும் இல்லை என்றாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி கேட்கிறார். இது பாஜகவுக்குத் தான் பயனளிக்கும். கூட்டணி அரசை காப்பாற்றுவதில் அவர் வெற்றி பெற மாட்டார். திங்கட்கிழமை வரை காத்திருப்போம்’’ என அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios