காங்கிரஸ் வழங்கிய உரிமைகளை பாஜக பறிக்கிறது: பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

காங்கிரஸ் வழங்கிய உரிமைகளை பாஜக பறிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

Whatever rights were given to you by the Congress are snatched away by bjp smp

மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு நவம்பர் 17ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே இருமுனை போட்டி நிலவி வருகிறது. தற்போது அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸால் உங்களுக்கு என்னென்ன உரிமைகள் வழங்கப்பட்டதோ, உங்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றுவதற்கு என்னென்ன வேலைகள் செய்யப்பட்டனவோ அவை அனைத்தும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் உங்களிடமிருந்து பறிக்கப்பட்டது என மத்தியப்பிரதேச மாநில தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் நடைபெற்ற ஜன் ஆக்ரோஷ் பேரணியில் பேசிய பிரியங்கா காந்தி, “காங்கிரஸால் உங்களுக்கு என்னென்ன உரிமைகள் வழங்கப்பட்டதோ, உங்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றுவதற்கு என்னென்ன வேலைகள் செய்யப்பட்டனவோ அவை அனைத்தும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் உங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. கிராம பஞ்சாயத்து தலைவர்களின் உரிமைகள் குறைக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கிராமங்களில் வேலை வாய்ப்பு இல்லாததால் இடப்பெயர்வு அதிகரித்துள்ளது. உங்கள் நிலம் பறிக்கப்படுகிறது. உங்களின் விளைபொருட்களுக்கு சரியான விலை வழங்கப்படவில்லை. நீங்கள் கிளர்ந்தெழுந்தால், உங்கள் மீது தோட்டாக்கள் வீசப்படுகின்றன.” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

“மக்கள் வேலைக்காக மாநிலத்தை விட்டு வெளியேறுகிறார்கள், பாஜக இங்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. 18 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்தும், வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. கொள்ளையடிப்பதில் மும்முரமாக உள்ளனர். எங்கு பார்த்தாலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன.” என்று பிரியங்கா காந்தி சாடினார். தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை பாஜக கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ராஜஸ்தான் தேர்தல் தேதி அதிரடி மாற்றம்.. இனி இந்த நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும்..

காங்கிரஸின் பாரம்பரியத்தைப் பாருங்கள் என தெரிவித்த அவர், வன உரிமைச் சட்டம் உங்களுக்காகக் கொண்டுவரப்பட்டது, அதனால் காடுகளின் மீது உங்களுக்கு முதல் உரிமை இருக்கிறது. அது உங்கள் கலாச்சாரம். இதைப் பாதுகாக்கவும் வலுப்படுத்தவும், உங்களுக்கு வன உரிமைச் சட்டம் வழங்கப்பட்டது. இங்கு எந்த அரசியல் தலைவர் வந்தாலும் நதி, காடு, ஜமீன் என்ற மூன்று வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதன் அடிப்படை அர்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம். அவர்கள் அனைவருமே வெற்று வாக்குறுதியை அளிக்கிறார்கள்.” என்றார்.

“நாட்டின், மாநிலத்தின், உங்கள் மாவட்டத்தின் சொத்து உங்கள் கைகளில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதுதான் காங்கிரஸின் கொள்கை. நீங்கள் வலுவாக இருக்க வேண்டும், உங்கள் சக்தியைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், மற்ற கட்சிகள் உங்கள் அதிகாரத்தை உங்கள் கையில் தருவார்களா?” என கேள்வி எழுப்பினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios