ராஜஸ்தான் தேர்தல் தேதி அதிரடி மாற்றம்.. இனி இந்த நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும்..
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இனி இந்த நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. முன்னதாக நவம்பர் 23-ம் தேதி வாக்குப்பதிவு தேதியாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இது மாற்றப்பட்டுள்ளது.
இப்போது நவம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தேதியை மாற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. தேவ உதானி ஏகாதசி 23 ஆம் தேதி என்பதால் நவம்பர் 23 ஆம் தேதி அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடக்கலாம். இதைக் கருத்தில் கொண்டு, தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுடன் ராஜஸ்தான் மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. நவம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை ஐந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும்.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன், ராஜஸ்தானில் உள்ள பல சமூக மற்றும் மத அமைப்புகள் நவம்பர் 23 பற்றி கவலை தெரிவித்தன. நவம்பர் 23ம் தேதி பல திருமணங்கள் இருப்பதால் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும் என்று கூறியதால் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.