ஜி20 உச்சி மாநாட்டில் திறக்கப்படும் டிஜிட்டல் மியூசியம்!
ஜி20 உச்சி மாநாட்டின் போது, டிஜிட்டல் மியூசியம் ஒன்றை திறக்க இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது
டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டை செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 10 வரை இந்தியா நடத்த உள்ளது. இந்த நிகழ்வுக்கான மெகா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜி20 உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக சாலைகள் மற்றும் கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்கும் முதன்மை உச்சிமாநாட்டில் ஜி20 டிஜிட்டல் மியூசியம் திறக்கப்பட உள்ளது. அனைத்து உறுப்பு நாடுகள் மற்றும் ஒன்பது விருந்தினர் நாடுகளில் இருந்து குறைந்தபட்சம் ஒரு முக்கிய கலைப்பொருளை அல்லது அதன் டிஜிட்டல் பிரதியைக் கொண்டிருக்கும் வகையில் ஜி20 டிஜிட்டல் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியம், செப்டம்பர் மாதம் நடைபெறும் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது திறக்கப்படவுள்ளது.
ஜி20 உச்சி மாநாடு: உலக தலைவர்களுக்கு காத்திருக்கும் பானிபூரி!
பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் உள்ள லியோனார்டோ டா வின்சியின் 16ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த மோனாலிசாவின் டிஜிட்டல் பிரதிகள், நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள டச்சு கலைஞர் ஜோஹன்னஸ் வெர்மீரின் புகழ்பெற்ற எண்ணெய் ஓவியமான ‘Girl With a Pearl Earring’இன் டிஜிட்டல் பிரதிகள் உள்ளிட்டவைகள் ஜி20 டிஜிட்டல் மியூசியமில் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அருங்காட்சியகம் 'phygital' museum என்றழைக்கப்படுகிறது. இயற்பியல் மற்றும் டிஜிட்டல் கூறுகளைக் கொண்ட அருங்காட்சியகத்தைக் கொண்டிருப்பதை இது குறிக்கிறது. இந்தியா வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியுள்ளது. கவர்ச்சிகரமான சந்தைகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி பல்வகைப்படுத்தலுக்கான ஆதாரமாக தன்னை ஒரு உயரும் சக்தியாக நிரூபிக்க முயலும் இந்தியாவுக்கு ஜி20 உச்சிமாநாடு முக்கியமானதாக கருதப்படுகிறது.