Agnipath Scheme Protest : இந்த திட்டம் காரணமாக ராணுவத்தில் ஒழுங்கு கெட்டுவிடும். அதேபோல் 4 வருடத்திற்கு பின் வெளியே வரும் அக்னி வீரர்கள் வேலை இன்றி கஷ்டப்படுவார்கள். இவர்களை தீவிரவாத இயக்கங்கள் அணுக வாய்ப்பு உள்ளது. 

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்ட உள்ளனர். அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். 

இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்கு பின் வெளியேறலாம். விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம். அதில் தகுதியானவர்கள் மட்டுமே 4 வருடத்திற்கு மேல் நிரந்தரமாக 15 வருடம் பணியாற்ற தேர்வு செய்யப்படுவர்.

இதையும் படிங்க : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்க.!! ஓபிஎஸ் ஆப்சென்ட்..தொடரும் ஒற்றை தலைமை சர்ச்சை !

இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும். 17.5 - 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி. 10 அல்லது 12 வது வரை குறைந்தபட்சம் படித்து இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும். 

கடைசி வருடம், அதாவது 4வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும். இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த திட்டம் காரணமாக ராணுவத்தில் ஒழுங்கு கெட்டுவிடும். அதேபோல் 4 வருடத்திற்கு பின் வெளியே வரும் அக்னி வீரர்கள் வேலை இன்றி கஷ்டப்படுவார்கள். இவர்களை தீவிரவாத இயக்கங்கள் அணுக வாய்ப்பு உள்ளது. 

பாதுகாப்பு ரீதியாகவும், வேலைவாய்ப்பு ரீதியாகவும் பல சிக்கல்களை இது ஏற்படுத்தும் என்று அக்னி வீர் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளன. அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடஇந்தியாவில் தொடர்ந்து வரும் போராட்டங்களுக்கு இடையில் வயது வரம்பு உயர்த்தப்பட்டது. 21 ஆக வயது வரம்பு இருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Viral video: பள்ளி குழந்தைகள் வேனை வழிமறித்த யானை.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ