MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • பிள்ளைகளுக்காக வீடு கட்டி வாழ்க்கையை கெடுக்காதீர்கள்.. பெற்றோர்களுக்கு பிரபலம் சொன்ன அட்வைஸ்

பிள்ளைகளுக்காக வீடு கட்டி வாழ்க்கையை கெடுக்காதீர்கள்.. பெற்றோர்களுக்கு பிரபலம் சொன்ன அட்வைஸ்

இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக கடன் வாங்கி பெரிய வீடு கட்டுவது வழக்கம். ஆனால் பெற்றோர்கள் தங்கள் ஓய்வுக்கால சேமிப்பு மற்றும் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பிரபலம் அறிவுறுத்தி உள்ளார்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 20 2026, 12:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பெற்றோர் ஆலோசனை
Image Credit : stockPhoto

பெற்றோர் ஆலோசனை

இந்திய குடும்பங்களில் பெற்றோர்–பிள்ளைகள் உறவு மிகவும் நெருக்கமானது. பிள்ளைகள் படித்து வேலைக்கு சென்ற பிறகு, அவர்களுக்கு பெற்றோர் தொடர்ந்து உதவி செய்வது சாதாரணமாக பார்க்கப்படுகிறது. பலர் தங்களது ஆசைகள், கனவுகள் அனைத்தையும் தியாகம் செய்து, “நாம் சந்தித்த கஷ்டம் பிள்ளைகளுக்கு வரக்கூடாது” என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக, கடன் எடுத்து கூட பெரிய வீடு கட்டி, அதை பிள்ளைகளுக்காக சேமித்து வைப்பதும் வழக்கமாக உள்ளது.

24
பிள்ளைகளுக்காக வீடு
Image Credit : instagram

பிள்ளைகளுக்காக வீடு

ஆனால் ‘நாட் டேட்டிங்’ நிறுவனத்தின் நிறுவனர் ஜஸ்விர் சிங், இந்த பழக்கத்தை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்துகிறார். தனது உறவினர் வீட்டிற்கு சென்ற அனுபவத்தை உதாரணமாக கூறிய அவர், பல வருடங்களாக உழைத்து கட்டப்பட்ட பெரிய வீட்டில் தற்போது யாரும் வசிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். இது, பெற்றோரின் எதிர்பார்ப்பு மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கை முறை இடையேயான இடைவெளியை வெளிப்படுத்துகிறது.

Related Articles

Related image1
வேலைக்கே போக வேண்டாம்.. மாசம் ₹9,250 கன்ஃபார்ம்..! Bank-ஐ விட பெஸ்ட்.. Risk-ஏ இல்லாத வருமானம்..!
Related image2
டோல் கட்டாமல் போனீங்களா? 72 மணி நேரத்துக்குள் கட்டுங்க.. இல்லனா இரட்டிப்பு அபராதம்
34
குடும்ப வாழ்க்கை
Image Credit : Getty

குடும்ப வாழ்க்கை

இன்றைய தலைமுறை அதிக வருமானம் ஈட்டுவதுடன், வேறு நகரங்கள் அல்லது நாடுகளில் வாழும் வாய்ப்பு அதிகம். அதனால், 20-30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளில் அவர்கள் வாழ வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், வீடுகளின் வடிவமைப்பு தேவைகளும் காலப்போக்கில் மாறிவிடுகின்றன. 15-20 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வீடுகள் பழமையானதாக தோன்றும் என்பது உண்மை.

44
வாழ்க்கை மாற்றம்
Image Credit : gemini

வாழ்க்கை மாற்றம்

இதனால், "பிள்ளைகளுக்காக மட்டும் வாழ்க்கையை முழுவதும் அர்ப்பணிக்க வேண்டாம்" என ஜஸ்விர் சிங் கூறுகிறார். அதற்கு பதிலாக, ஓய்வுக்கால சேமிப்பு மற்றும் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி, பலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் எதிர்ப்பு பதிவு. சிலர் “சொந்த வீடு பாதுகாப்பு” என கூற, மற்றவர்கள் “வாழ்க்கை மாற்றத்திற்கு ஏற்ப புதிய வீடு வாங்கலாம்” என வாதிடுகின்றனர்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெற்றோர் ஆலோசனை
ரியல் எஸ்டேட்
இந்தியா
குழந்தைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!
Recommended image2
Hormuz Crisis: இந்த தீவுப் பக்கமே போகாதீங்க! இந்திய கப்பல்களுக்கு நேவி போட்ட புதிய உத்தரவு
Recommended image3
சுதந்திரத்திற்க்குப் பின் 8 முதலமைச்சர்களை மட்டுமே கண்ட மாநிலம் எது தெரியுமா? அரசியல் நிலைத்தன்மை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.!
Related Stories
Recommended image1
வேலைக்கே போக வேண்டாம்.. மாசம் ₹9,250 கன்ஃபார்ம்..! Bank-ஐ விட பெஸ்ட்.. Risk-ஏ இல்லாத வருமானம்..!
Recommended image2
டோல் கட்டாமல் போனீங்களா? 72 மணி நேரத்துக்குள் கட்டுங்க.. இல்லனா இரட்டிப்பு அபராதம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved