MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • டோல் கட்டாமல் போனீங்களா? 72 மணி நேரத்துக்குள் கட்டுங்க.. இல்லனா இரட்டிப்பு அபராதம்

டோல் கட்டாமல் போனீங்களா? 72 மணி நேரத்துக்குள் கட்டுங்க.. இல்லனா இரட்டிப்பு அபராதம்

தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் செலுத்தாத வாகனங்களுக்கு 72 மணி நேரத்திற்குள் இ-நோட்டீஸ் அனுப்பும் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்த தவறினால், அபராதம் இரட்டிப்பாக்கப்படும்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 20 2026, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
72 மணி நேரம் தான் டைம்
Image Credit : our own

72 மணி நேரம் தான் டைம்

தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் தவிர்ப்பவர்களுக்கு இனி “சாதாரணம்” இல்லை. 2026 புதிய விதிமுறைகள் மூலம் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. டோல் செலுத்தாமல் பயணம் செய்த வாகனங்களுக்கு இப்போது நேரடியாக இ-நோட்டிபிகேஷன் அனுப்பப்படும். இது டிஜிட்டல் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

25
எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷன்
Image Credit : Asianet News

எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷன்

புதிய விதிகளின்படி, பாஸ்டேக் அல்லது எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷன் (ETC) முறையில் பதிவு செய்யப்பட்ட வாகனம் டோல் கட்டணம் செலுத்தாமல் சென்றால், அது “செலுத்தப்படாத பயன்பாட்டுக் கட்டணம்” எனக் கருதப்படும். உடனடியாக அந்த வாகன உரிமையாளருக்கு எஸ்எம்எஸ், மின்னஞ்சல் அல்லது மொபைல் ஆப் மூலம் இ-நோட்டீஸ் அனுப்பப்படும். இதில் வாகன விவரம், பயணித்த தேதி மற்றும் நேரம், டோல் பிளாசா தகவல் மற்றும் கட்ட வேண்டிய தொகை ஆகியவை இடம்பெறும்.

Related Articles

Related image1
தமிழகத்தில் ஏப் 1 முதல் எகிறப்போகும் டோல்கேட் கட்டணங்கள்..! 28 டோல்களுக்கான புதிய தொகை அறிவிப்பு..
Related image2
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ஏப்ரல் 1 முதல் டோல் பூத் காணாமல் போகப் போகுது.! பணம் செலுத்துவது எப்படி? முழு விவரம்.!
35
72 மணி நேரத்திற்குள் கட்டணம்
Image Credit : X

72 மணி நேரத்திற்குள் கட்டணம்

இந்த அறிவிப்பு கிடைத்த 72 மணி நேரத்திற்குள் கட்டணம் செலுத்தினால், வழக்கமான டோல் கட்டணம் மட்டும் செலுத்தினாலே போதும். ஆனால் அந்த காலக்கெடு கடந்தால், கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கப்படும். நோட்டீஸ் தவறாக வந்ததாக நினைப்பவர்கள், 72 மணி நேரத்திற்குள் ஆன்லைனில் புகார் அளிக்கலாம். அந்த புகார் 5 நாட்களுக்குள் பரிசீலித்து தீர்வு அளிக்கப்படும்.

45
நிலுவை தொகை
Image Credit : Generated by google gemini AI

நிலுவை தொகை

எனினும், 15 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தப்படாவிட்டால் அல்லது புகார் அளிக்கப்படாவிட்டால், நிலுவை தொகை வாகனத் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படும். இதனால் வாகனத்துடன் தொடர்புடைய சில சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் டோல் தவிர்ப்பை குறைப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும்.

55
தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
Image Credit : Google

தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

இதற்கிடையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கும் பாஸ்டேக் ஆண்டுச் சலுகை பாஸின் கட்டணமும் உயர்ந்துள்ளது. ஏப்ரல் 1 முதல், இந்த பாஸ் ரூ.3,000 முதல் ரூ.3,075 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறிய உயர்வாக தோன்றினாலும், அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு இது கூடுதல் செலவாக அமையும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சுங்கச்சாவடி கட்டணங்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
தேசிய நெடுஞ்சாலைகள்
ஃபாஸ்டேக்
ஃபாஸ்டேக் விதிகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
டோல்கேட்டில் FASTag சிக்கலா? இனி இப்படி செய்தால் 50% பணம் மிச்சம்.. புது ரூல்ஸ் தெரிஞ்சிக்கோங்க!
Recommended image2
Business Idea: பேப்பர் முட்டை ட்ரே பிசினஸ் மூலம் மாதம் லட்சங்களில் சம்பாதிக்கலாம்.! A to Z முழு தகவல் இதோ.!
Recommended image3
தொடர்ந்து சரியும் தங்கம் விலை.! ரூ.80,000-க்கு கீழ் குறையுமா? நிபுணர்கள் கூறுவது என்ன.?
Related Stories
Recommended image1
தமிழகத்தில் ஏப் 1 முதல் எகிறப்போகும் டோல்கேட் கட்டணங்கள்..! 28 டோல்களுக்கான புதிய தொகை அறிவிப்பு..
Recommended image2
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ஏப்ரல் 1 முதல் டோல் பூத் காணாமல் போகப் போகுது.! பணம் செலுத்துவது எப்படி? முழு விவரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved