Mahakumbh 2025 Sadhus Last rites in Tamil : மகா கும்பமேளா 2025: ஒரு சாதாரண மனிதன் இறந்தால், அவரது இறுதிச் சடங்குகள் 13 நாட்களில் முடிவடையும். ஆனால் சன்னியாசிகளுக்கு, 16 நாளில், அதாவது 'சோலசி' அன்றுதான் அனைத்து சடங்குகளும் முடிவடையும்.
Mahakumbh 2025 Sadhus Last rites in Tamil : சாதுக்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்: பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் சாதுக்களின் தனி உலகத்தைக் காண முடிகிறது. சாதுக்களுக்கு எனத் தனிப்பட்ட சடங்குகள் உள்ளன. சைவ அகாடாக்களில் ஒரு சாது இறந்தால், அவரது இறுதிச் சடங்குகள் எப்படி, எத்தனை நாட்களுக்குப் பிறகு செய்யப்படுகின்றன என்பது வெகு சிலருக்குத் தெரியும். சைவ அகாடாக்களைச் சேர்ந்த சாதுக்கள் இறந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
மகாகும்ப மேளா 2025; பிரயாக்ராஜில் டிராஃபிக் ஜாம்; அதிரடி ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத்!
சாதுக்களை எரிக்கிறார்களா? சமாதி வைக்கிறார்களா?
சைவ அகாடாக்களில் ஒரு சன்னியாசி இறக்கும் போது, அவரை எரிப்பதில்லை. மாறாக பாரம்பரிய முறைப்படி அவர்களுக்கு சமாதி வைக்கிறார்கள். அதாவது, அவரது உடலைப் புதைக்கிறார்கள். அப்போது, இறந்த சாதுவின் உடல் படுத்த நிலையில் இல்லாமல், அமர்ந்த நிலையில் இருக்கும். சமாதி வைப்பதற்கு முன், உடலைப் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். இதை 'டோல்' என்று அழைக்கிறார்கள்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வருகை; கும்பமேளாவில் தினமும் 1.44 கோடி பக்தர்கள் நீராடல்!
எத்தனை நாட்களுக்குப் பிறகு சடங்குகள் செய்யப்படும்?
பொதுவாக ஒருவர் இறந்தால், அவரது இறுதிச் சடங்குகள் 13 நாட்களில் முடிவடையும். ஆனால் சைவ அகாடாக்களில் அப்படி இல்லை. இறந்த சாதுவின் இறுதிச் சடங்குகள் 16 நாட்கள் வரை நீடிக்கும். 16ஆம் நாளில் நடைபெறும் முக்கிய நிகழ்வு 'சோலசி' என்று அழைக்கப்படுகிறது. சன்னியாசிகளுக்கு சமாதி முதல் சோலசி வரை உள்ள சடங்குகளைச் செய்வதற்கென்றே ஒரு தனி அகாடா உள்ளது. இது 'கோதர் அகாடா என்று அழைக்கப்படுகிறது. நாட்டில் எங்கு ஒரு சன்னியாசி இறந்தாலும், அவரது 16 நாள் சடங்குகளில் இந்த அகாடாவை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வது அவசியம்.
மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
16 நாட்களும் தினமும் படையல் வைக்கிறார்கள்
கோதர் அகாடாவைச் சேர்ந்த சாதுக்கள், இறந்த சாதுவின் சமாதியில் 16 நாட்களும் தினமும் படையல் வைத்து, மற்ற சடங்குகளையும் செய்கிறார்கள். 16 நாட்களுக்குப் பிறகு, மற்ற அனைத்து சடங்குகளையும் இறந்த சன்னியாசியின் சீடர்கள் செய்கிறார்கள். 16-ஆம் நாள் சோலசி நிகழ்வுக்குப் பிறகு, சாதுக்களுக்கு விருந்து வைக்கப்படுகிறது. அதன் பிறகுதான் இறந்த சாதுவின் இறுதிச் சடங்குகள் முழுமையாக நிறைவடைகின்றன.
உ.பி. கும்பமேளாவை விடுங்க; கர்நாடகாவில் 3 நாள் மகா கும்பமேளா நடக்குது தெரியுமா? முழு விவரம்!
