Asianet News TamilAsianet News Tamil

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டமாக தேர்தல்... தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது கடினம் என்பதால், 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

West Bengal Elections From March 27 In 8 Phases
Author
Delhi, First Published Feb 26, 2021, 6:15 PM IST

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தேதிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்து வருகிறார். 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது தொடர்பாகத் தேர்தல் ஆணையர்கள் ஏற்கெனவே அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் பதற்றத்துக்குரிய வாக்குப்பதிவு மையங்கள், பாதுகாப்பு வசதிகள், வாக்காளர்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநிலத் தேர்தல் அதிகாரிகள், தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பிவிட்டனர். இதன் அடிப்படையில் எத்தனை கட்டங்களாக ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

West Bengal Elections From March 27 In 8 Phases


மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது கடினம் என்பதால், 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மார்ச் 27ம் முதற்கட்ட தேர்தலும், ஏப்ரல் 1ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும், ஏப்ரல் 6ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும், ஏப்ரல் 10ல் 4ம் கட்ட தேர்தலும், ஏப்ரல் 17ம் தேதி 5ம் கட்ட தேர்தலும், ஏப்ரல் 22ல் 6ம் கட்ட தேர்தலும், ஏப்ரல் 26ல் 7ம் கட்ட தேர்தலும், ஏப்ரல் 29ல் 8ம் கட்ட தேர்தல் என 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios