தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஜூன்ஸ், டி-சர்ட், லெகின்ஸ் அணிய தடை..!

இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஜீன்ஸ் பேண்ட் அணிவது என்றால் ஆவல் அதிகம்தான். ஆண்களும் பெண்களும் ஜீன்ஸ் மீது அலாதியான மோகம் கொண்டுள்ளனர். விலை எவ்வளவாக இருந்தாலும் அதை வாங்க தவறுவதில்லை.

wearing jeans t-shirts and leggings ban... Assam Secretariat staff

தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஜூன்ஸ், லெக்கின்ஸ் அணிய அசாம் மாநில அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. 

இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஜீன்ஸ் பேண்ட் அணிவது என்றால் ஆவல் அதிகம்தான். ஆண்களும் பெண்களும் ஜீன்ஸ் மீது அலாதியான மோகம் கொண்டுள்ளனர். விலை எவ்வளவாக இருந்தாலும் அதை வாங்க தவறுவதில்லை. அது நாகரிகத்தின் அடையாளமாகவும், கவுரவமிக்கதாகவும் ஆகிவிட்டது. இந்நிலையில், அசாம் மாநிலத்தின் திஸ்பூரில் உள்ள தலைமை செயலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- முடி கொட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்த இளைஞர்.. மருத்துவர் தான் காரணம் - அதிர்ச்சி தகவல்!

wearing jeans t-shirts and leggings ban... Assam Secretariat staff

இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஜூன்ஸ், டி-சர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி அலுவல நேரத்தில் கட்டாயமாக பராம்பரிய உடைகளை அணிய வேண்டும்.  ஆண்கள் இனி சட்டை மற்றும் பேண்ட் அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை மற்றும் சல்வார்-கமீஸ் அணியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

wearing jeans t-shirts and leggings ban... Assam Secretariat staff

மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் ஊழியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க தவறும் தலைமைச்செயலக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா - சோயிப் மாலிக் விவாகரத்து?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios