‘ஒரே நாளில்  1,400 கோடி தகவல்கள் பகிர்வு...மலைக்க வைத்த வாட்ஸ் ஆப் 

இந்தியாவில் புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் வாட்ஸ் ஆப் மூலம் ஆயிரத்து 400 கோடி தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் புத்தாண்டுக்கு முந்தைய நாளான டிசம்பர் 31 சனிக்கிழமையன்று, 2017ம் ஆண்டை வரவேற்கும் விதமாக இந்தியா முழுவதும் உள்ள மக்கள், காெண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தங்களது புத்தாண்டு வாழ்த்தை பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பகிா்ந்துகாெண்டனா்.  

புத்தாண்டுக்கு முந்தைய நாளில்  வாட்ஸ் அப் மூலம் இந்தியாவில் செய்யப்பட்ட தகவல் பரிமாற்றத்தின் எண்ணிக்கை குறித்து அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் வாட்ஸ் ஆப் மூலம் 1,400 கோடி தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 32 % தகவல்கள் புகைப்படங்களாகவும், ஜி.ஐ.எப். ரக படங்களாகவும், குரல் பதிவு தகவல்களாகவும் பகிரப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளில் வாழ்த்துகளை தெரிவிப்பதற்காக 800 கோடி தகவல்கள் வாட்ஸ் ஆப் மூலம் பகிரப்பட்ட நிலையில், புத்தாண்டில் பகிர்வு எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன்கள் வைத்திருப்போர் தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ் ஆப்பையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

Attachments area