MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ஓலா, உபர், ரேபிடோ இன்றே கடைய சாத்த வேண்டியது தான்.. 30% கம்மி வாடகையில் அறிமுகமாகிறது Bharat Taxi

ஓலா, உபர், ரேபிடோ இன்றே கடைய சாத்த வேண்டியது தான்.. 30% கம்மி வாடகையில் அறிமுகமாகிறது Bharat Taxi

ஓலா, உபர், ரேபிடோ போன்ற செயலிகளுக்கு மாற்றாக அரசு சார்பில் Bharat Taxi சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அறிமுகப்படுத்துகிறார். இந்த சேவையில் கமிஷன் இல்லை என்பதால் வாடிக்கையாளர்களுக்கு 30% வரை கம்மி கட்டணத்தில் சேவை வழங்க முடியும்.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 05 2026, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாரத் டாக்சி
Image Credit : stockPhoto

பாரத் டாக்சி

ஓலா, உபர், ரேபிடோ போன்ற தனியார் செயலிகளுக்கு மாற்றாக கூட்டுறவுத்துறை சார்பில் பாரத் டாக்சி சேவையை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார். இந்த செயலியில் கார், ஆட்டோக்களை இயக்கும் ஓட்டுநர்கள் பெறும் தொகையில் கமிஷன் பிடித்தம் செய்யப்படாது. டெல்லியில் தொடங்கப்படும் இந்த சேவை திட்டத்தில் முதல் கட்டமாக 2.5 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
கமிஷன் இல்லை
Image Credit : Asianet News

கமிஷன் இல்லை

பாரத் டாக்சி சேவையில் இணையும் வாகனங்களின் ஓட்டுநர்களிடம் கமிஷன் தொகை பிடித்தம் செய்யப்படாது. இதனால் வாடிக்கையாளர்கள் வழங்கும் தொகையை ஓட்டுநர் முழுமையாகப் பெற்றுக் கொள்ளலாம். மாறாக செயலி பராமரிப்பு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.30 மட்டும் செலுத்தினால் போதுமானது.

Related Articles

Related image1
ஓலா, ஏதருக்கு பெரிய டென்ஷன்.. பெரிய கை இந்தியாவுக்கு வருது.. இனி ஸ்கூட்டர்கள் கம்மி விலையில்
Related image2
ஓலா ஸ்கூட்டர் விலை வெறும் ரூ.39,999 மட்டுமே.. எங்கு தேடினாலும் கிடைக்காது
34
30 சதவீதம் கட்டணம் குறையும்
Image Credit : Google

30 சதவீதம் கட்டணம் குறையும்

இந்த நிலையில் தற்போது உள்ள ஓலா, உபர் போன்ற செயலிகளை விடவும் பாரத் டாக்சி 30 சதவீதம் குறைந்த கட்டணத்தில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் செயலிகளில் ஓட்டுநர்களிடம் ஒவ்வொரு பயணத்திற்கும் ரூ.30 முதல் ரூ.50 வரை கமிஷனாக பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த சிக்கலில் இருந்து ஓட்டுநர்களும், வாகன உரிமையாளர்களும் விடுபட முடியும்.

44
2 ஆண்டுகளில் நாடு முழுவதும் விரிவாக்கம்
Image Credit : freepik AI

2 ஆண்டுகளில் நாடு முழுவதும் விரிவாக்கம்

இந்த செயலி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி மற்றும் குஜராத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட நிலையில் இதனை ஒவ்வொரு நாளும் சராசரயாக 5500 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். மேலும் 1.4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இந்த செயலியை பதிவு செய்துள்ளனர். இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் உள்ளிட்ட தளங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில் இந்த செயலி நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் பாரத் டாக்சி விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓலா
உபேர்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
மைலேஜ் வாரி வழங்கும்.. மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் வாங்கும் பட்ஜெட் பைக்குகள்.. முழு லிஸ்ட்
Recommended image2
ஓலா, ஏதருக்கு பெரிய டென்ஷன்.. பெரிய கை இந்தியாவுக்கு வருது.. இனி ஸ்கூட்டர்கள் கம்மி விலையில்
Recommended image3
Tata Sierra: நிறுவனம் சொன்ன மைலேஜ் இது; ஆனால் உண்மையில் கிடைத்தது..?
Related Stories
Recommended image1
ஓலா, ஏதருக்கு பெரிய டென்ஷன்.. பெரிய கை இந்தியாவுக்கு வருது.. இனி ஸ்கூட்டர்கள் கம்மி விலையில்
Recommended image2
ஓலா ஸ்கூட்டர் விலை வெறும் ரூ.39,999 மட்டுமே.. எங்கு தேடினாலும் கிடைக்காது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved