சைக்கிளில் இருந்து கீழே விழுந்த முதியவரை ‘ஸ்லோவா வந்தது ஏன்?’ எனக் கேட்டு சரமாரியாகத் தாக்கும் பெண் போலீஸ்!
பீகாரில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்த முதியவரை, ‘மெதுவாக வந்தது ஏன்?’ என்று கேட்டு பெண் காவலர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை பீகாரின் கைமூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்பிரகாஷ் சதுக்கம் அருகே சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென தடுமாறி விழுந்துள்ளார். தட்டுத்தடுமாறி எழுந்த அவரை அந்தப் பகுதியில் இருந்த பெண் காவலர்கள் இருவர், ‘ஏன் மெதுவாக வந்தீர்கள்’ என்று கேட்டு பலமுறை அடித்தனர்.
பெண் காவலர்கள் ஈவு இரக்கம் இல்லாமல் முதியவரை கம்புகளால் தாக்கி சைக்கிளை எடுத்துகொண்டு கிளம்புமாறு விரட்டினர். முதியவர் சைக்கிளைத் தூக் முடியாமல் தள்ளாடியபோதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று சொல்லி அவரைத் தொடர்ந்து தாக்கியுள்ளனர்.
பெண் காவலர்களின் இந்த மனிதாபிமானம் இல்லாத செயலை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகப் பரவி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தடுமாறி விழுந்த முதியவருக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக, கொடூரமாகத் தாக்கி இருப்பதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
பிசிசி ஆவணப்படம் தொடர்பான யூடியூப், ட்விட்டர் பதிவுகள் முடக்கம்
இதனிடையே, கீழே விழுந்து அடிபட்ட முதியவர் பெயர் நாவல் கிஷோர் பாண்டே என்றும் பாபுவா மாவட்டம் பர்மல்கூர் கிராமத்தைச் சேர்ந்த அவர் கைமூரில் உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ குறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் பதிவிட்டபோது, “அந்த முதியவர் செய்த தவறு இந்த பெண் காவலர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து கீழே விழுந்ததுதான்” என்று தெரிவித்துள்ளார்.
Buzz Aldrin: நிலவில் கால்பதித்த ஆல்ட்ரினுக்கு 93 வயதில் 4வது திருமணம்!
மேலும், பீகார் துணை முதல்வர் தேஜாஸ்வியை டேக் செய்து, முதியவரைத் தாக்கிய பெண் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இந்நிலையில் முதியவரை பெண் காவலர்கள் தாக்கியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக கைமூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லலித் மோகன் சர்மா கூறியுள்ளார்.