காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஸ் – இ – முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 42 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அதிகாலை இந்திய விமானப் படை பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது.

இதைத் தொடர்ந்து இன்றும் பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் இந்திய  - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் அணு ஆயுத நிபுணர்களுடன் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தயாரிப்பு, உருவாக்கம், ஆராய்ச்சி, மேம்பாடு தொடர்பான விஷயங்களை கவனித்து வரும் நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அணு ஆயுத தயாரிப்பு பிரிவின் மிக முக்கிய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிகிறது. 

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை பேரும் போரை நோக்கியதாக இருப்பதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன. 

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த 72 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார்.


போர் மூளுமா, அமைதி திரும்புமா என்பது அடுத்த 72 மணி நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டால், இரண்டாம் உலகப் போரை விட மிகப் பெரியதாக இருக்கும் என்றும், அதுவே இறுதியான போராக இருக்கும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.