viral video:செல்போன் முக்கியம்!ரயிலில் சிக்கி தண்டவாளத்தில் படுத்து தப்பித்தும் போன் பேசுவதை நிறுத்தாத பெண்:
viral video: ரயில் மோதுவதிலிருந்து தப்பிக்க தண்டவாளத்தில் படுத்த(குறுக்குவசம் அல்ல நேராக) பெண் ரயில் கடந்த சென்றபின்பும் காதிலிருந்து செல்போனை எடுக்காமல் பேசிக்கொண்டே சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
ரயில் மோதுவதிலிருந்து தப்பிக்க தண்டவாளத்தில் படுத்த(குறுக்குவசம் அல்ல நேராக) பெண் ரயில் கடந்த சென்றபின்பும் காதிலிருந்து செல்போனை எடுக்காமல் பேசிக்கொண்டே சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தவீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் போலீஸார் மிகப்பெரிய விருதாக கன்னத்தில் ஓங்கி அறை கொடுக்க வேண்டும் என்று கண்டித்துள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரி திபான்சு கப்ரா கடந்த 12ம் தேதி இந்த வீடியோவை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை ஒரு லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
அதாவது எது நடந்தாலும் செல்போன்தான் முக்கியம், அதை தவறவிடக்கூடாது என்ற ரீதியில் அந்த இளம்பெண் நடந்து கொண்டார். தன் மீது சரக்குரயில் ஏறிச் சென்ற எந்த பதற்றமும், பயமும் இல்லாமல் எதுவுமே நடக்காததுபோன்று இருப்புப்பாதையிலிருந்து எழுந்து மீண்டும் செல்போனில் பேசிக்கொண்டே அந்த இளம் பெண் சென்றது நெட்டிசன்களை ஆத்திரமூட்டியுள்ளது.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஐபிஎஸ் அதிகாரி கப்ரா பதிவிட்ட கருத்தில் “ போனில் புரணி பேசுதல் மிக முக்கியமாகப்போய் விட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவால் சரக்கு ரயில் ஒன்று இருப்பாதையில் கடந்து செல்கிறது. அந்த ரயி்ல் சென்றபின் தண்டவாளத்திலிருந்து ஒரு இளம் பெண் எழுந்து செல்போனில் பேசிக்கொண்டே வருகிறார். அந்த இளம் பெண்ணும் தனது துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு, ரயில் கடந்து சென்றபின் மீண்டும் ரயில் தண்டவாளத்திலேயே நடந்து சென்றார்.
பார்ப்பவர்களின் உடலைபுல்லெரிக்கச் செய்யும் இந்த வீடியோவில், இருக்கும் இளம் பெண்ணோ தனக்கு ஏதும் நடக்கவில்லை, ரயிலுக்கு அடியில் படுத்து உயிர்பிழைத்திருக்கிறேன் என்ற பதற்றமும் இல்லாமல் செல்போனில் பேசிக்கொண்டே சென்றார்
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த இளம் பெண்களை கடுமையாக சாடியுள்ளனர். அதில் ஒருவர் “ நல்லவேளை, அந்த சரக்கு ரயிலில் எந்தவிதமான பொருளும் தண்டவாளத்தின் அருகே தொங்கிக்கொண்டு செல்லவில்லை.அவ்வாறு இருந்தால், அந்த பெண்ணின் சில உறுப்புகள் மட்டுமே அங்கு இருக்கும் மொத்தமாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் பதிவிட்ட கருத்தில் “ இந்த இளம் பெண்ணு வீரதீரச் செயலுக்கான விருதாக, கன்னத்தில் பளார் என அறை விட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். சிலர், இந்த வீடியோவையும், ட்விட்டையும் பிரதமர் அலுவலகத்துக்கு டேக் செய்து, அந்த பெண்ணை கைது செய்யக் கோரி வலியுறுத்தியுள்ளனர்