வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்! பேரு நல்லா இருக்கு சாப்பாடு? பயணி வெளியிட்ட வீடியோ வைரலால் ரயில்வே அதிர்ச்சி
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து சொகுசு வசதிகளும் இருந்தாலும், சாப்பாடு மோசமாக இருக்கிறது என்று பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து சொகுசு வசதிகளும் இருந்தாலும், சாப்பாடு மோசமாக இருக்கிறது என்று பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டிணத்தில் இருந்து தெலங்கானாவின் செகந்திராபாத் நகருக்கு சமீபத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இரு மாநிலங்களை இணைக்கும் ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புஇருந்தது.
அதானி என்டர்பிரைசர்ஸ் FPO ரத்து இந்தியாவின் மரியாதையை பாதிக்காது: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை
இந்நிலையில் விசாகப்பட்டிணத்தில் இருந்து செகந்திராபாத் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவு மோசமாக இருந்தது. அந்த உணவின் நிலை குறித்து அந்தப்பயணி வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார்.
ரயிலில் உணவு சப்ளை ஊழியர் காலை உணவை அந்தப்பயணியிடம் வழங்கிவிட்டு சென்றபின், அந்த உணவை பயணி கையால் பிழிந்தார். அப்போது அந்த உணவில் ஏராளமான சமையல் எண்ணைய் வழிந்தது. இதைப் பார்த்த அந்தப் பயணி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் உணவின் தரம் இதுதான் என்று தெரிவித்தார்
இதைப் பார்த்த பத்திரிகையாளர் ஒருவர், இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டு இந்திய ரயில்வேக்கு டேக் செய்துவிட்டார். அதில் “வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவு தரமில்லாததாக இருந்தது.
விசாகப்பட்டிணத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட வடையில் ஏராளமான எண்ணெய் பிழிந்து எடுக்கப்பட்டது. இதைச் சாப்பிடவே பயணிகள் அச்சப்படுகிறார்கள். உணவின் நிலை மோசமாக இருக்கிறது என பயணிகள் தெரிவித்தார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஐஆர்சிடிசி தரப்பில் பதில் அளிக்கையில் “ இது குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தது.
மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்திய வந்தேபாரத் ரயிலில் பயணிக்கவும் அதன் வேகம், சொகுசு வசதிகளை அனுபவிக்கவும் பயணிகள் ஆர்வமாக பயணிக்க வருகிறார்கள். மற்ற ரயில்களைவிட கட்டணமும் அதிகம். இவ்வளவு செலவு செய்து ரயலில் பயணித்தும், அங்கு வழங்கப்படும் தரமற்ற உணவால், ரயிலில் உணவுக்கும் சேர்த்து கட்டணம் செலுத்திவிட்டு, பயணிகளை நோகடிக்க வைக்கிறது. இதற்கு வீட்டில் இருந்து உணவு கொண்டுவந்திருக்கலாமோ என்று பயணிகளை சிந்திக்க வைக்கிறது.