அதானி என்டர்பிரைசர்ஸ் FPO ரத்து இந்தியாவின் மரியாதையை பாதிக்காது: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை
அதானி என்டர்பிரைசர்ஸ் FPO பங்கு வெளியீடு திடீரென ரத்து செய்யப்பட்டதால், சர்வதேச சந்தையில் இந்தியாவின் பொருளாதாரத் தோற்றம், மரியாதை பாதிக்காது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதானி என்டர்பிரைசர்ஸ் FPO பங்கு வெளியீடு திடீரென ரத்து செய்யப்பட்டதால், சர்வதேச சந்தையில் இந்தியாவின் பொருளாதாரத் தோற்றம், மரியாதை பாதிக்காது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் பொதுப் பங்குகளை ரூ.20ஆயிரம் கோடிக்கு வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்தது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் 4.62 கோடி பங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட நிலையில் அதில் 4.55 கோடி பங்குகள் வாங்கப்பட்டன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த வாரம் அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த தில்லுமுல்லு மோசடிகள் குறித்து அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்குப்பின் அதானி குழுமத்தின் பங்குகள் 30 சதவீதம் சரிந்தன.
மத்திய பட்ஜெட்-டில் சிறுபான்மை நலத்துறைக்கு 38% நிதி குறைப்பு: மதரஸாக்களுக்கு 93% குறைப்பு
இந்த சூழலில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எப்பிஓ நடந்ததால், சந்தையில் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணிக்கை எப்ஓவை அதானி குழுமம் ரத்து செய்தது. முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க முடிவு செய்தது.
இந்த சம்பவத்துக்குப்பின் அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனப் பங்குள் மோசமாகச் சரிந்தன. ஆனால், அதானி குழுமத்தால் கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இருக்கிறது என்று சர்வதேச கடன்தரநிறுவனங்கள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து பங்குச்சந்தையில் நேற்று அதானி என்டர்பிரைசர்ஸ் பங்குகள் மீண்டும் உயர்ந்தன.
இந்நிலையில் மும்பையில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது, அதானி குழுமம் எப்பிஓ ரத்தால் சர்வதேசசந்தையில் இந்தியாவின் தோற்றத்துக்கு பாதிப்பு வருமான என நிருபர்கள் கேள்விஎழுப்பினர்.
அதற்கு நிர்மலா சீதாரமன் பதில் அளித்துப் பேசியதாவது:
அதானி என்டர்பிரைசஸ் FPO திடீர் வாபஸ்: முதலீட்டாளர்களிடம் பணத்தை திரும்ப அளிக்க முடிவு
நம்முடைய மேக்ரோ எக்னாமிக் எனப்படும் பேரியியல்பொருளாதாராம் அதாவது வேலைவாய்ப்பு, தொழில்வளர்ச்சி, மூலதனம், முதலீடு, சேமிப்பு, தனிநபர் வருமானம், வேளாண்மை ஆகியவை வலுவாக இருக்கிறது. சர்வதேச சந்தையில் நம்முடைய பொருளாதாரத் தோற்றமும் பாதிக்கப்படாது. எப்பிஓ வரலாம், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பங்குகளை திரும்பப் பெறலாம் இது நம்மை பாதிக்காது.
இந்தியாவிடம் 800 கோடி டாலர்கள் அந்நியச் செலாவணி கையிருப்பில் கடந்த 2 நாட்களில் வந்துள்ளன. ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் போக்கு குறித்து செபி, ரிசர்வ் வங்கி உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிப்பாளர்கள், சந்தையின் உறுதி, நிலைத்தன்மையை அந்த நிறுவனங்கள் உறுதி செய்யும்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ரிசர்வ் வங்கி விளக்கம்அளித்துள்ளது. வங்கித்துறை நிலைத்தன்மையாகவும், எதையும் தாங்கும் நிலையுடன் உள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்