கர்நாடக பாஜக எம்.பி.சொத்து 4,186% உயர்வு!10 ஆண்டுகளில் 71 எம்.பி.க்கள் சம்பாத்யம் 286% அதிகரிப்பு:ஏடிஆர் ஆய்வு
கடந்த 2009லிருந்து 2019ம் ஆண்டுவரை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 286 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2009லிருந்து 2019ம் ஆண்டுவரை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 286 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ADR) தேர்தல் ஆணையத்திடம் எம்.பி.க்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது.
10 ஆண்டுகள்
2009ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரை மக்களவைக்கு 71 எம்.பி.க்கள் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சொத்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், 2009ம் ஆண்டில் இந்த பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் உள்ளிட்ட 71 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.15கோடியாக இருந்தது
பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
2014ம் ஆண்டில் இந்த 71 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.16.23 கோடியாகவும், 2019ல் இந்த 71 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.23.75 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
சொத்து மதிப்பு
2009 முதல் 2019ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் 71 எம்.பி.க்களின் சொத்துக்களின் சராசரி வளர்ச்சி என்பது ரூ.17.56 கோடியாகும். சதவீத அடிப்படையில் பார்த்தால் 71 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு 286 சதவீதம் வளர்ந்துள்ளது.
இதில் டாப்-10 எம்.பி.க்களின் சொத்துக்களை மதிப்பிட்டால் அதில் 4 பேர் மட்டுமே பிற கட்சி எம்.பி.க்கள் மற்ற 6 எம்.பி.க்களும் பாஜகவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 6 எம்.பி.க்களில் 4 பேர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் என்பது கவனிக்கத்தக்கது.
கர்நாடகாவைச் சேர்ந்த ரமேஷ் சந்தப்பா, பிசி மோகன், பிஒய் ராகவேந்திரா, உதசி ஆகியோரின் சொத்து மதிப்பு பலன்மடங்கு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
வெடித்த அதானி விவகாரம்: உடும்புபிடியில் எதிர்க்கட்சிகள்! நாடாளுமன்றம் நாள்முழுவதும் ஒத்திவைப்பு
கர்நாடக பீஜப்பூர் எம்.பி
இதில் அதிகபட்சமாக கர்நாடகாவைச் சேர்ந்த பிஜப்பூர் தொகுதி பாஜக எம்.பி.யின் ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினகி சொத்து கடந்த 10 ஆண்டுகளில் 4,189 சதவீதம் அதிகரித்துள்ளது. ரமேஷ் சந்தப்பா தொடர்ந்து 6வது முறையாக பிஜப்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2016 முதல் 2019ம் ஆண்டுவரை மத்திய இணைஅமைச்சராகவும் இருந்தார்.
அதாவது 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ரமேஷ் சந்தப்பா சொத்து ரூ.1.14 கோடியாக இருந்தது. 2014ம் ஆண்டில் ரமேஷ் சந்தப்பா சொத்து மதிப்பு ரூ.8.94 கோடியாக உயர்ந்தது, 2019ம் ஆண்டில் சொத்து மதிப்பு ரூ.50.41 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 4,189 சதவீதம் ரமேஷ் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
2வது இடத்தில் பெங்களூரு மத்தியத் தொகுதி பாஜக எம்.பி. பி.சி.மோகன் சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் 1306 சதவீதம் அதிகரி்த்துள்ளது. கடந்த 2009ல் மோகன் சொத்து மதிப்புரூ.5 கோடியாகவும், 2014ல் ரூ.47 கோடியாகவும், 2019ல் ரூ.75 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடி-யின் வெளிநாட்டு பயணம்! செலவு விவரத்தை வெளியிட்ட மத்திய அரசு
வருண் காந்தி
3வது இடத்தில் பிலிபிட் தொகுதி பாஜக எம்.பி. வருண் காந்தி சொத்து மதிப்பு 1,124 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2009ல் வருண் காந்தி சொத்து ரூ.4 கோடியாக இருந்தநிலையில் 2014ல் ரூ.35 கோடியாகவும், 2019ல்ரூ.60 கோடியாகவும் உயர்ந்தது.
பஞ்சாப்பில் பத்தின்டா தொகுதி எம்.பியும் சிரோன்மணி அகாலி தளம் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் சொத்து மதிப்பு 261 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2009ல் ரூ.60 கோடியாக இருந்தநிலையில் 2014ல்ரூ.108 கோடியாகவும், 2019ல் ரூ.217 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
சரத்பவார் மகள்
தேசியவாத காங்கிரஸ்தலைவர் சரத்பவர் மகளும், பாரமதி தொகுதி எம்.பி. சுப்ரியா சுலே சொத்து மதிப்பு 173 சதவீதம் உயர்ந்துள்ளது. 2019ல் ரூ.51 கோடியாக இருந்தநிலையில் 2019ல் ரூ.140 கோடியாக அதிகரித்துள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த பிஜேடி கட்சியின் பூரி தொகுதி எம்.பி. பினாகி மிஸ்ரா சொத்து மதிப்பு 296 சதவீதம்அதிகரித்துள்ளது. 2009ல் ரூ.29 கோடியாக இருந்த மிஸ்ராவின் சொத்து 10 ஆண்டுகளில் ரூ.117 கோடியாக உயர்ந்தது.
பாஜகவைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் 217 சதவீதம் உயர்ந்துள்ளது. 2009ல் ரூ.17கோடியாக இருந்தது, 2019ல் ரூ.55 கோடியாக அதிகரி்த்துள்ளது.