BBC Documentary: பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Modi BBC Documentary:பிபிசி சேனல் குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து எடுத்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு விதித்த தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
பிபிசி சேனல் குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து எடுத்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு விதித்த தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, கடந்த 2002ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதைத் தொடர்ந்து பெரிய அளவிலான கலவரமும் ஏற்பட்டது.
இந்த கலவரம் குறித்து பிபிசி சேனல், “ India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் என எந்த சமூக வலைத்தளத்திலும் லிங்குகளை பதிவிடக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பிபிசி-யின் பிரதமர் மோடி ஆவணப்படத் தடைக்கு எதிரான மனு:உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
ஆனால், மத்திய அரசின் எதிர்ப்பை மீறி தெலங்கானா, கேரளா, டெல்லி பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் திரையிட்டு பார்த்து வருகிறார்கள். இதனால் தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன.
பிபிசி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்எல் ஷர்மா, மூத்த வழக்கறிஞர்கள் சியு சிங் பத்திரிகையாளர் என் ராம், மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூமா மொய்த்ரா ஆகியோரும் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்மா மற்றும் எம்எம் சுந்தரேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “ மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
பிரதமர் மோடிக்கு ஆதரவு! பிபிசி சேனலை வெளுத்து வாங்கிய பிரிட்டன் எம்.பி
இந்த தடை உத்தரவு தொடர்பாக மத்திய அரசு அசல் ஆவணங்களை அடுத்த 3 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடுகிறோம். மனுதாரர்களும் தங்களின் பதிலை அடுத்த இரு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்கிறோம்” என உத்தரவிட்டனர்.