திருப்பதிக்கு இப்போது போக வேண்டாம்.. அதிரடியாக ரத்து செய்யப்பட்ட தரிசனம்.. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..
கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தன் எதிரொலியாக திருமலையில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேவஸ்தானம் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 'வி.ஐ.பி., பிரேக்' தரிசனத்தை ரத்து செய்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தன் எதிரொலியாக திருமலையில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேவஸ்தானம் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 'வி.ஐ.பி., பிரேக்' தரிசனத்தை ரத்து செய்துள்ளது. மேலும் கூட்ட நெரிசல் காரணமாக திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை சிறிது தள்ளி வைக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளதால், திருமலை திருப்பதியில் பக்தர்கள் வழக்கம் போல தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் நாளொன்று அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச தரிசன் டிக்கேட் அங்குள்ள கவுண்டரிகளில் பெற்றுக்கொள்ள மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் விடுமுறை நாட்களின் போது திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த தரிசன டிக்கேட்களின் முன்பதிவு மூலம் பக்தர்கள் நான்கு நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தேவஸ்தானம் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 'வி.ஐ.பி., பிரேக்' தரிசனத்தை ரத்து செய்துள்ளது. பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளது. மேலும் திருப்பதியில் பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதால் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பக்தர்கள் டோக்கன்கள், தரிசன டிக்கேட்கள் இல்லாமல்
திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். காத்திருப்பு அறைகளை தாண்டி பக்தர்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தரிசன நேரமும் பல மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை சிறிது தள்ளி வைக்க வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் டோக்கன்கள் இல்லாமல் பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதால், தரிசன வரிசையில் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயல்கின்றனர். இதனால் நேற்று ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.