Asianet News TamilAsianet News Tamil

"விஜய் மல்லையாவை ஜூலை 10-ல் உறுதியாக ஆஜர்படுத்துங்கள்" - உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

vijay mallya should appear in court on july 10
vijay mallya-should-appear-in-court-on-july-10
Author
First Published May 10, 2017, 5:35 PM IST


வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் வசிக்கும் விஜய்மல்லையாவை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வரும் ஜூலை 10-ந் தேதி உறுதியாக, பாதுகாப்பாகவும் ஆஜர்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல்  லண்டனுக்கு தப்பி ஓடினார்.

இவர் மீது அமலாக்கப் பிரிவு, சி.பி.ஐ. அமைப்புகள் சார்பில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இங்கிலாந்து அரசு மூலம் மத்திய அரசு மல்லையாவை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. கடந்த மாதம் ஸ்காட்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட மல்லையா அடுத்த 3 மணிநேரத்தில் ஜாமீன் பெற்று விடுதலையானார்.

இதற்கிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த டியாகியா நிறுவனத்திடம் தனது பங்குகளை விற்பனை செய்ததால் கிடைத்த 4 கோடி டாலர்களை தனது பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுத்தார். இது தொடர்பாக வங்கிக்கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்த வழக்கில் விஜய் மல்லையா சொத்துவிவரங்களை வௌியிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இதை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் விஜய் மல்லையா தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. ஆனால், அந்த உத்தரவுகளை மல்லையா மதிக்காமல், சொத்து விவரங்களை வௌியிட மறுத்தார். இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வங்கிகள் கூட்டமைப்பு தொடர்ந்தன.

இந்த வழக்ைக விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார்கோயல், மற்றும் உதய் உமேஷ் லலித் தீர்ப்பளித்தனர். அந்த 26 பக்க தீர்ப்பில் கூறியிருப்பதாவது-

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவை ஜூலை 10-ந்தேதிக்குமுன்பாக உறுதியாக ஆஜர்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், மத்தியஅரசுக்கும் உத்தரவிடுகிறோம். எங்கள் தீர்ப்புக்கு கட்டுப்பட நகலை உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கிறோம்.

சொத்துக்களை வௌியிடக்கோரி  நாங்கள் பிறப்பித்த உத்தரவில் இதுவரை மல்லையா சொத்துக்களை வௌியிடவில்லை, நேரில் ஆஜராகவும் இல்லை. இந்த வழக்கில் மல்லையாவுக்கு நீதிமன்றம் தேவைப்பட்டால் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும்.

இந்த வழக்கில் மல்லையா தனது சொத்துக்களின் விவரங்களை வௌியிடவேண்டும் என்று நீதிமன்றம் தனது உத்தரவுகளை தௌிவாகவும், சந்தேகத்துக்கு இடமின்றி பிறப்பித்துள்ளது.ஆனால், இந்த உத்தரவுகளுக்கு மல்லையா தரப்பில் எந்த பதிலும் இல்லை, உத்தரவுக்கு பணியவும் இல்லை.

இதுவரை வௌிநாடுகளில் இருக்கும் சொத்து விவரங்களை மல்லையாவௌியிடவில்லை. இது உண்மையில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியது தெளிவாகத் தெரிகிறது. ஆதலால், கண்டிப்பாக ஜூலை 10-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios