ஜெகதீப் தங்கருக்கு டஃப் கொடுப்பாரா எதிர்க்கட்சி வேட்பாளர்.. யார் இந்த மார்கரெட் ஆல்வா? முழு தகவல்கள் இதோ..!
16 எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டன. அதன் முடிவில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வாவை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, புதிய துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநரும், மம்தா பானர்ஜியின் மம்தாவின் எதிரியுமான ஜெகதீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் துணை குடியரசு வேட்பாளர் தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் அவரது வீட்டில் நேற்று நடந்தது.
இதையும் படிங்க;- மம்தாவின் எதிரி டூ பாஜக வேட்பாளர் ; யார் இந்த ஜெகதீப் தங்கர் ? முழு தகவல்கள் இதோ !
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, ராஷ்ட்டிரிய ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டன. அதன் முடிவில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வாவை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை கூட்டம் முடிந்ததும் சரத் பவார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மார்கரெட் ஆல்வா வரும் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
யார் இந்த மார்கரெட்?
மார்கரெட் ஆல்வா, 1942ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி கர்நாடகாவின் மங்களூருவில் பிறந்தார். சட்டப்படிப்பு பயின்ற மார்கரெட் ஆல்வா,1969ம் ஆண்டு அரசியலில் காலடி எடுத்து வைத்தார். இந்திராகாந்தி தலைமையின் கீழ் பணியாற்றிய ஆல்வா, 1975-1977ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணை செயலாளராகவும், 1978-1980ம் ஆண்டு கர்நாடக காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
இதையும் படிங்க;- துணை குடியரசு தலைவர் தேர்தல்.. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் அறிவிப்பு !
1974-1998ம் ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை துணைத்தலைவராக பணியாற்றி உள்ளார். 1999ல் உத்தர கன்னடா தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு ஒன்றிய அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். கோவா, குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார். இவர் சோனியா காந்திக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.