பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? நோபல் குழு துணை தலைவரின் தகவலால் பரபரப்பு- உற்சாகத்தில் பாஜக
போரிடும் நாடுகளிடையே போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவராக இந்திய பிரதமர் மோடி இருப்பதாக தெரிவித்துள்ள நோபல் குழுவின் துணைத் தலைவர் ஆஷ்லே டோஜே, அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கான அனைத்து தகுதிகளையும் மோடிக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மோடிக்கு நோபல் பரிசு
கொரோனா வைரஸ் இந்தியாவில் உச்சகட்டத்தில் இருந்த போது மக்கள் பாதிக்கப்பட்டு வீட்டிற்கு முடங்கி கிடந்தனர். இதனையடுத்து நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது மட்டுமில்லாமல், மக்களை கொரான வைரஸ் பாதிப்பில் இருந்து மீட்க தடுப்பூசியை தயாரிக்க மருத்துவ குழுவிற்கு உற்சாகத்தை பிரதமர் மோடி வழங்கினார். அப்போதே பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வந்த நிலையில் அங்கு ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கி தவித்தனர். இதனையடுத்து தனது முயற்சியால் போரை நிறுத்தி உக்ரைனில் சிக்கி இருந்த இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டெடுத்தார். எனவே மோடிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற குரல் அதிகரித்தது
அமைதியின் தூதூவர் மோடி
இந்தநிலையில் பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க தகுதியானர் என நோபல் குழுவின் துணைத் தலைவராக ஆஷ்லே டோஜே தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுற்றது. நோபல் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும், நார்வேவை சேர்ந்த நோபல் குழுவின் துணைத் தலைவராக ஆஷ்லே டோஜே உள்ளார். இந்திய பிரதமர் மோடி தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், இந்தியா உலக அரசியலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமைதியின் தூதராகக் செயல்படுவதாக கூறியுள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க தருணம்
உலக நாடுகள் இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள ஆஷ்லே டோஜே உலகில் மிகவும் தகுதி வாய்ந்த தலைவரான பிரதமர் மோடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே அமைதிக்கான நோபல் பரிசை பிரதமர் மோடி வென்றால் அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும் எனவும் பேசியுள்ளார். ஆஷ்லே டோஜே பேச்சு தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்