இந்தியா டுடே பத்திரிகை சார்பில் சென்னையில் நடைபெற்ற கலத்துரையாடலில் பேசிய வெங்கைய நாயுடு, ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்.

ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்த முடிவு உச்சநீதிமன்றத்தின் கைகளில் உள்ளது. இதற்கு சட்டப்பூர்வமாக மட்டுமே அனுமதி வழங்க முடியும் எனறார்.

தொடர்ந்து இது குறித்து கேள்வி கேட்டபோது, எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இப்பிரச்சனையை நான் கையளவில்லை என ஒட்டு மொத்தமாக ஜல்லிக்கட்டை கை கழுவினார்.

கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் குறித்து பேசினார். அப்போது தற்போது தமிழகத்தில் யார் தலைமைச் செயலாளர் என்றே தெரிவில்லை என்றார்.

முதலமைச்சர் புதிய தலைமைச் செயலாளரை நியமிக்கிறார், ஆனால் ராம மோகன ராவ் நான் தான் தலைமைச் செயலாளர் என சவால் விடுகிறார். இது நல்லதல்ல என குறிப்பிட்ட வெங்கய்ய நாயுடு, ராம மோகன ராவ் ஓர் அதிகாரி, அவர் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

பா.ஜ.க. ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிப்போம் என்று உறுதியளித்துத்தான் ஆட்சிக்கு வந்தது என்றும் இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் மோடி செயல்பட்டு வருதாக கூறினார். அனைத்து மாநிலங்களுடன் சுமூகமாகவே இருக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.