Asianet News TamilAsianet News Tamil

சைபர் கிரிமனலாக மாறிய காய்கறி வியாபாரி.. மக்களை ஏமாற்றி 6 மாதத்தில் 21 கோடி சம்பாதித்தது எப்படி?

ஹரியானாவின் ஃபரிதாபாத்தை சேர்ந்த ரிஷப் சர்மா காய்கறி வியாபாரி ஒருவர் சைபர் குற்றவாளியாக மாறியுள்ளார். 

Vegetabel vendor turns cyber criminal How did he cheat people and earn 21 crores in 6 months? Rya
Author
First Published Nov 3, 2023, 3:27 PM IST | Last Updated Nov 3, 2023, 3:27 PM IST

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் பல்வேறு நூதன வழிகளில் பணத்தை கொள்ளை அடித்து வருகின்றனர். அந்த வகையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தை சேர்ந்த ரிஷப் சர்மா காய்கறி வியாபாரி ஒருவர் சைபர் குற்றவாளியாக மாறியுள்ளார். 

மக்களை ஏமாற்றியதன் மூலம் வெறும் ஆறு மாதங்களில்,  21 கோடி ரூபாய் அவர் கொள்ளையடித்துள்ளார். இந்தியாவின் 10 மாநிலங்களில் அவர் மீது 37 மோசடி வழக்குகள் போடப்பட்டுள்ளது. அவர் 855 மோசடிகளில் உதவியதாகவும் கூறப்படுகிறது. பணத்தை மாற்ற அவர் பயன்படுத்திய வங்கிக் கணக்குகள் காரணமாக அக்டோபர் 28ஆம் தேதி அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அவர் சீனா மற்றும் சிங்கப்பூர் போன்ற பிற நாடுகளைச் சேர்ந்த கிரிமினல் குழுக்களுடன் இணைந்து ரகசிய முறைகளைப் பயன்படுத்தி பணத்தை அனுப்பியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சில ஆண்டுகளுக்கு முன்பு, ரிஷப் ஃபரிதாபாத்தில் பகுதி நேர காய்கறி விற்பனையாளராக இருந்தார். ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் அவரின் தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டது. அவரது குடும்பத்தை ஆதரிப்பதற்காக, அவர் வீட்டில் இருந்து பல்வேறு வேலைகளை முயற்சித்தார். அப்போதுதான் ஏற்கனவே ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்ட பழைய நண்பருடன் மீண்டும் இணைந்தார்.

அவரது நண்பர் தொலைபேசி எண்களின் பட்டியலை ரிஷப்பிடம் கொடுத்துள்ளார். அந்த எண்களை தொடர்பு கொள்ளும் ரிஷப் அவர்களை நம்ப வைத்து போலி வேலை வாய்ப்புகளை வழங்குவார். அதற்கு முன் பணம் கொடுக்க வேண்டும் என்பது கூறி ஏமாற்றி உள்ளார். அந்த வகையில் கடைசியா ரிஷப்பிடம் ஏமாந்தவர், டெஹ்ராடூனைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். அவர் ரூ.20 லட்சத்தை இழந்தவர்.

மேரியட் போன்வாய் ஹோட்டலின் இணையதளம் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கினார் ரிஷப். மேலும் ஹோட்டல் குழுவிற்கு மதிப்புரைகள் எழுத பகுதி நேர வேலைகளை வழங்குவதாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேரியட் போன்வாயை சேர்ந்தவர் போல் நடித்து, பாதிக்கப்பட்டவர்களை தனது சக ஊழியரான சோனியாவிடம் அறிமுகப்படுத்தினார், அவர் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்வதாகக் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு போலி டெலிகிராம் குழுவையும் உருவாக்கினார். ஹோட்டலுக்கு நேர்மறையான மதிப்புரைகளை எழுதவும், போலி விருந்தினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் அவர் அவர்களிடம் கேட்டார். முதலில் ரூ.10,000 கொடுத்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். பிறகு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து அதிக முதலீடு செய்யும்படி அவர்களை சமாதானப்படுத்தினார். ஆனால் மக்கள் நிறைய பணத்தை முதலீடு செய்தவுடன், ரிஷப் தலைமறைவாகிவிட்டார். பணத்தை முதலீடு செய்தவர்களால் அவரை அணுக முடியவில்லை.

இளைஞரைச் சுத்தியலால் அடித்துக் கொன்ற சகோதர்! ரூ.1.9 கோடி பணத்துக்காக சதித் திட்டம்!

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் ரிஷப் மீது மோசடி மற்றும் இதர குற்றங்களை போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த மோசடி மற்ற நாடுகளில் உள்ள கிரிமினல் குழுக்களுடன் தொடர்புடையது என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த குழுக்கள் திருடப்பட்ட பணத்தை மற்ற நாடுகளுக்கு ரகசியமாக அனுப்புவதற்கு முன் வங்கிக் கணக்குகளை திறக்க இந்தியாவில் உள்ளவர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர்.

ரிஷப்பை கைது செய்த பின்னர், இந்தப் பிரச்சனை எவ்வளவு பெரியது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. . அவர் 10 மாநிலங்களில் பல வழக்குகளில் தொடர்புடையவர் என்று கண்டறியப்பட்டது. இந்த சிக்கலான மோசடிகளை கையாள்வது அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த குற்றத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios