Asianet News TamilAsianet News Tamil

West Nile Fever : கேரளாவை அச்சுறுத்தும் வெஸ்ட் நைல் வைரஸ்..கொசுவில் இருந்து பரவும் புது வைரஸ்.!

Man succumbs to West Nile fever in Kerala's Thrissur : குறிப்பாக பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தண்ணீர் தேங்க விடக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Veena George orders controlling spread of mosquitoes as man succumbs to West Nile fever in Thrissur
Author
First Published May 30, 2022, 2:20 PM IST

வெஸ்ட் நைல் வைரஸ் என்பது கியூலெக்ஸ் கொசுக்களால் பரவும் நோய். WHO கூற்றுப்படி, இது “ஃபிளவிவைரஸ் இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பறவைகளிலிருந்து கொசுக்களுக்கும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. அதே நேரம் இது மனிதர்களிடமிருந்து மனிதர்களை தாக்குவதில்லை. பாதிக்கப்பட்ட பறவையை கொசு கடிக்கும் போது, இந்த வைரஸ் கொசு பாதிக்கப்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் வைரஸ், கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளில் நுழைகிறது.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட கொசு மனிதர் அல்லது பிற விலங்குகளை கடிக்கும் போது, வைரஸ் அவர்கள் உடலுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் ரத்தமாற்றம் மூலமாக பரவக்கூடும். பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து அவரது குழந்தைக்கும் அல்லது ஆய்வகங்களில் வைரஸின் வெளிப்பாடு மூலமாகவும் பரவலாம். பாதிக்கப்பட்ட மனிதர்கள் அல்லது விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுவதாக ஆதாரங்கள் தெரிவிக்கவில்லை.

Veena George orders controlling spread of mosquitoes as man succumbs to West Nile fever in Thrissur

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய கூற்றுப்படி, பறவைகள் உட்பட பாதிக்கப்பட்ட விலங்குகளை சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பரவாது. ஆனால், இறைச்சியை முறையாக சமைத்து சாப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80% பேருக்கு அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. எஞ்சியிருக்கும் 20 சதவீத பேருக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, சரும பாதிப்புகள், உடல் வலி, வீங்கிய நிணநீர் சுரப்பிகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கடுமையான நோய்தொற்றுக்கு ஆளாகும்போது மூளை அழற்சி, மூளைக்காய்ச்சல், பக்கவாதம் மட்டுமின்றி மரணம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. இந்நிலையில் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வெஸ்ட் நைல் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. அதேநேரம் தற்காப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டும்.

கொசுக்களை அழிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தண்ணீர் தேங்க விடக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். காய்ச்சல் அல்லது நோயின் பிற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பொதுமக்கள் மருத்துவமனையில் செல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : Rajya Sabha Elections : 18 வருஷம் ஆச்சு.. எம்.பிக்கு கூட எனக்கு தகுதி இல்லையா ? கடுப்பான நடிகை நக்மா !

இதையும் படிங்க : கணவன் கண்முன்னே கள்ளகாதலனுடன் மனைவி உல்லாசம்.. வாழைத்தோப்பில் கொன்று புதைத்த சம்பவம் !

Follow Us:
Download App:
  • android
  • ios