நாளை மறுநாள் முதல் 12-14 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் முதல் 12-14 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலக அளவில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது. அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் மீண்டும் அதன் ஆட்டத்தை துவக்கிய நிலையில் தற்போது சற்றே அடங்கியுள்ளது. இதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே அஸ்திரம் தடுப்பூசி என்னும் நிலை ஏற்பட்டது. அதன்படி உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசிகளை தயார் செய்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. தடுப்பூசி தான் மக்களை காக்கும் பேராயுதம் என உலக சுகாதார அமைப்பும், உலக நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதன் பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற நிலை ஏற்பட்டது. இதை அடுத்து இந்தியா முழுவதிலும், தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போடுவதில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில் 12-14 வயதான சிறுவர்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி 15-18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஒவ்வொரு பள்ளியிலும் 15-18 வயது உடைய மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது நாடு முழுவதும் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட் னிக்-வி ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 15-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை மட்டுமே செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் முதல் 12-14 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
