Asianet News TamilAsianet News Tamil

என்னை எங்கே தூக்கியடிச்சாலும் சசிகலாவை மட்டும் விடவேமாட்டேன்...! சீறும் அந்த பெண் சிங்கம் யார்?

சர்வ கட்சிகளின் அவைத்தலைவர் முதல் கடைசி கிளைச்செயலாளர் வரை ஜெயலலிதாவின் தோரணையைப் பார்த்து நடுநடுங்குவார்கள். ஆனால் ஆயிரம் பஞ்சாயத்துகள் இருந்தாலும் சசிகலாவுக்கு அவரிடம் பயம் வந்தது கிடையாது. அப்பேர்ப்பட்ட சசியையே திகைப்பில் தெறிக்கவிட்ட லேடி என்றால் அது ரூபா தான்!

V.K. Sasikala Roopa
Author
Bangalore, First Published Dec 19, 2018, 3:44 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சர்வ கட்சிகளின் அவைத்தலைவர் முதல் கடைசி கிளைச்செயலாளர் வரை ஜெயலலிதாவின் தோரணையைப் பார்த்து நடுநடுங்குவார்கள். ஆனால் ஆயிரம் பஞ்சாயத்துகள் இருந்தாலும் சசிகலாவுக்கு அவரிடம் பயம் வந்தது கிடையாது. அப்பேர்ப்பட்ட சசியையே திகைப்பில் தெறிக்கவிட்ட லேடி என்றால் அது ரூபா தான்!

சசிகலா கடந்த இரண்டு ஆண்டுகளாக வாசம் செய்யும் பரப்பன அக்ரஹாரா சிறையில் டி.ஐ.ஜி.யாக இருந்தவர். அங்கே தனி அறைகள், படுக்கை, டி.வி. தனி சமையல் என்றாரம்பித்து, கைதி உடையல்லாமல் கலர் உடைகள் அணிந்து கொள்ள சலுகை என்று சசிக்கு சகல செளகர்யங்களும் கிடைப்பதையும், இந்த விதிமீறல்களுக்கு பிரதியுபகாரமாக பல கோடிகள் கை மாறியிருக்கிறது என்பதையும் ஆதாரங்களோடு  வெளிப்படையாக போட்டு உடைத்தவர். இவரது அதிரடி ஆக்‌ஷனை கண்டு கர்நாடக சிறைத்துறை மட்டுமல்ல, தேசமே நடுநடுங்கிப் போன நிலையில் சசி மட்டும் எம்மாத்திரம்.

 V.K. Sasikala Roopa

இந்த பூகம்பத்தை பற்ற வைத்த பின் ரூபாவை உடனடியாக இடமாற்றம் செய்தது அப்போது ஆட்சியிலிருந்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு. அதன் பின் சசிகலாவுக்கு செளகரியங்கள் உட்பட பரப்பன அக்ரஹாரா சிறை விதிமீறல்களை விசாரிக்க வினய் குமார் எனும் ரிட்டயர்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. V.K. Sasikala Roopa

வினய் குமார் தனது விசாரணையை மிக விரிவாக முடித்து, அதுபற்றிய துல்லிய அறிக்கையையும் சமர்ப்பித்துவிட்டார். இந்நிலையில், ரூபா அந்த அறிக்கையின் நகலை தனக்கு வழங்கிடும்படி சட்டப்பூர்வமாக கேட்டிருக்கிறார். ஆனால் அதிகாரத்தில் உள்ள சிலர் அதை இழுத்தடித்து, எஸ்கேப் ஆகிறார்கள். இத்தனைக்கும் கர்நாடகாவில் சித்தராமையாவின் ஆட்சி மாறி இப்போது குமாரசாமி முதல்வராக இருக்கிறார். ‘சட்ட ஒழுங்கு பராமரிப்பில் சமரசம் செய்ய நான் தயாரில்லை.’ என்று மிக தெளிவாக அவர் அறிவித்துவிட்ட பிறகும் கூட சில அதிகாரிகள் இப்படி தங்களின் எதிர்மறை குணத்தை கைவிட மறுக்கிறார்களாம். V.K. Sasikala Roopa

வினய் குமார் கமிஷனின் அறிக்கையின் நகலை பெறுவதற்கு தனக்கு சட்ட ரீதியாக உரிமை இருப்பதை அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்று ரூபா உணர்த்தியும் கூட இன்னமும் அவரது கைகளுக்கு அது  தரப்படவில்லையாம். விளைவு, கோர்ட்டுக்கு சென்று அதை பெற்றுக் கொள்ளும் முடிவில் இருக்கிறாராம். சரி அந்த அறிக்கையின் நகலை வாங்கி என்ன செய்யப்போகிறாராம் மேடம்?...ரூபா ஐ.பி.எஸ்.ஸின் ப்ரொஃபைலை புரட்டிப் பார்த்தால் அத்தனையும் அதிரடிகள், சாகசங்கள். V.K. Sasikala Roopa

ஆனால் அவரது அனுபவங்களில் பரப்பன சிறையில் சசிக்கு வழங்கப்பட்ட சலுகைகளும், அவருக்காக சட்டம் வளைக்கப்பட்டிருந்ததும் கொடுமையானதாம்! அந்த வழக்கு விவகாரம் இறுதி வரையில் நேர்மையாக நடந்து முடியவேண்டும் என்பதே ரூபாவின் எதிர்பார்ப்பு. அதுவரையில் இந்த விவகாரத்தை விட்டு விலகவே மாட்டேன், எத்தனை ட்ரான்ஸ்ஃபர்கள் வந்து எங்கு சென்றாலும், இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணிக் கொண்டே இருப்பேன்! என்று தன் நட்பு அதிகாரிகளிடம் உறுதியாக தெரிவித்துள்ளாராம். பெண் சிங்கத்தின் கர்ஜனை அடங்காது!...

Follow Us:
Download App:
  • android
  • ios