உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு லலித் பதவி ஏற்றார்.. ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யூ.யூ லலித்  இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


 

UU Lalit took office as the Chief Justice of the Supreme Court.. President Draupadi Murmu administered the oath.

இந்தியாவில் 49வது தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித் இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

உச்சநீதிமன்ற நீதிபதி  ரமணா என்.வி ரமணா ஆகஸ்டு 26-ஆம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உதய் உமேஸ் லலித் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார், தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள உதயத்தின் பதவி காலம் வெறும் 74 நாட்கள் மட்டுமே இருக்கும் என்றும் நவம்பர் 8ஆம் தேதி அவர் ஓய்வு பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

UU Lalit took office as the Chief Justice of the Supreme Court.. President Draupadi Murmu administered the oath.

இதையும் படியுங்கள்: narendra modi: பிரதமர் மோடி 2 நாட்கள் குஜராத் பயணம்: பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்

தலைமை நீதிபதி  யு.யு லலித் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் ஆவார், 1957 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் பிறந்த இவர் 1983ல் மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சிலில் தன்னை வழக்கறிஞராகவும் பதிவு செய்தார். அதன்பிறகு 1986  டெல்லிக்கு வந்த அவர் 1985  வரை பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி மேற்கொண்டார், யு.யு லலித் குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார், நாட்டையே உலுக்கிய 2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றினார்.

இதையும் படியுங்கள்: கள்ளக் குறிச்சி மாணவியின் தாய் முதல்வருடன் சந்திப்பு.. தலைமைச் செயலகத்திற்கே வந்து ஸ்டாலினிடம் முறையீடு.

தொடர்ந்து இரண்டு முறை உச்ச நீதிமன்றத்தின் சட்டப்பணிகள் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார், இந்தியாவிலேயே வழக்றிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இரண்டாவது நீதிபதி லலித் ஆவார்,  இவருக்கு முன்பு நாட்டில் 13வது தலைமை நீதிபதி எஸ்.எம் சி கிரி 1971இல் இதேபோல வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார், அவருக்குப்பின்  யு.யு லலிதா அப்பெருமையைப் பெற்றார். இதேபோல் அயோத்தி வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இடம்பெற்று பின்னர் அதில் இருந்து விலகி பரபரப்பாக பேசப்பட்டார் லலித்

UU Lalit took office as the Chief Justice of the Supreme Court.. President Draupadi Murmu administered the oath.

20 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தி வழக்கில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் வழக்கறிஞராகவும் இவர் இருந்தார், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள யு.யு லலித் முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் ஆவார், அதில் மிக முக்கியமானது, முத்தலாக், பத்மநாபசுவாமி கோவில் மீதான  திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் உரிமைக் கோரல் விழக்கின் தீர்ப்பு போன்றவை அடங்கும். 


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios