உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து.. விரைவில் மீட்கப்பட உள்ள 41 தொழிலாளர்கள்.. மீட்புப்பணிகள் தீவிரம்..

உத்திரகாசி சுரங்க பாதை விபத்தின் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள 41 தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்பட உள்ளனர்.

Uttarkashi Tunnel collapse rescue operation in last stage rescuers to pull out 41 workers soon  Rya

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்திரகாசி மாவட்டத்தில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ தொலைவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 41 பணியாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்கும் பணி 12-வது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநில பேரிடர் மீட்பு படை, ராணுவ பொறியாளர்கள், இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட 8 அரசு நிறுவனங்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் உணவு, ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் தொழிலாளர்களை மீட்கும் பணி இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

 

மீட்புக் குழு கிடைமட்ட துளையிடும் இயந்திரத்தைப் பயன்படுத்தி சுரங்கப்பாதையில் குழாய்களைச் செருகுகிறது, ஆனால் வழியில் உள்ள இரும்பு கம்பிகளை வெட்டுவதில் சில சிரமங்களை எதிர்கொண்டனர். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NHIDCL) இன் மீட்பு முயற்சிகளுக்கு தலைமை தாங்கும் கர்னல் தீபக் பாட்டீல், இதுகுறித்து பேசிய போது “  இரண்டு குழாய்களை அமைக்கும் பணி இன்னும் மீதமுள்ளது. கடைசி குழாயின் முன் பகுதி சேதமடைந்தது; அதை வெட்டும் பணி நடந்து வருகிறது. அதற்கு 6 மணி நேரம் எடுக்கும்.

நாங்கள் சுரங்கப்பாதையில் 44 மீட்டர் தோண்டியுள்ளோம். ஆனால் இயந்திரத்தால் வெட்ட முடியாத சில எஃகு கம்பிகளை மீட்பு பணியில் சிரமங்களை சந்தித்திருக்கிறோம். எனவே தேசிய பேரிடர் மீட்புப் படை பணியாளர்கள் அவற்றை வெட்டுவதற்கு எரிவாயு கட்டரைப் பயன்படுத்துவார்கள். அதன்பின் மீண்டும் இயந்திரத்தை பயன்படுத்துவோம், ஒரு மணி நேரத்தில் எஃகுத் துண்டுகளை வெட்டி, அடுத்த ஐந்து மணி நேரத்தில் மேலும் இரண்டு குழாய்களை அமைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

 

கடந்த 12 நாட்களாக சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.8.5 மீட்டர் உயரமும், 2 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட சுரங்கப்பாதைக்குள் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக நம்பப்படுகிறது. சுரங்கப்பாதையில் தொழிலாளர்களுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி உள்ளது. ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் இன்னும் 40 மணி நேரத்தில் மீட்கப்படுவார்கள்!!

ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் குழுவும் சுரங்கப்பாதையின் உள்ளே மற்றும் சின்யாலிசூரில் உள்ள சமூக சுகாதார மையத்தில் தயாராக உள்ளது, அங்கு தொழிலாளர்களுக்காக 41 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மேற்பார்வையிட முதல்வர் புஷ்கர் தாமியும் உத்தரகாசியில் உள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios