Joshimath interim relief: ஜோஷிமத் நிலச்சரிவு - 1.5 லட்சம் இழப்பீடு, மாதம் ரூ.4000 நிதி உதவி அறிவிப்பு
உத்தராகண்ட் மாநிலம் ஜோஜிமத் பகுதியில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்ககளுக்கு இடைக்கால நிவாரணமாக 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஜோஷிமத் பகுதி நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் உட்பட பல கட்டிடங்கள், சாலைகள் பெரும் சேதம் அடைந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இச்சூழலில் அப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடாக வழங்குவதாக உத்தராகண்ட் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் வாடகை வீடுகளில் தங்க விரும்புகிறவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மாதம் தோறும் 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
Mangaluru cooker blast: குக்கர் வெடிகுண்டு வழக்கு: கர்நாடகாவில் அமலாக்கத்துறை தேடுதல் வேட்டை
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாநில முதல்வரின் முதன்மைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், “அபாயகரமானவையாகக் கண்டறியப்பட்ட இரண்டு ஹோட்டல்களை முழுமையாக இடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 723 வீடுகளில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது” என்று கூறினார்.
“ஜனவரி 7ஆம் தேதிக்குப் பிறகு கட்டிடங்களில் புதிதாக விரிசல்கள் ஏற்படவில்லை. ஏற்கெனவே ஏற்பட்ட விரிசல்களும் பெரிதாகவில்லை” எனவும் மீனாட்சி சுந்தரம் கூறினார்.
மேலும், சமோலி மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்து, நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் 131 குடும்பங்கள் அவர்கள் வசித்த வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ரூ.133 கோடி அபராதமா? கூகிள் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்