உத்தரபிரதேசத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

உத்தரபிரதேச மாநிலம் சந்துவாலி மாவட்டத்தின் சாகியா பகுதியில் உள்ள கிராமம் மால்டா. புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை ஆடு, மாடுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக சென்றுக்கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது.

 

இதனையடுத்து அங்கிருந்த குடிசை வீடு மீது பயங்கர வேகத்தில் மோதியது. அப்போது குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த 4 குழந்தைகள், 2 பெண்கள், ஆண் ஒருவர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.