உத்தரபிரதேசத்தில் மகளின் வருங்கால கணவருடன் ஓடிப்போன பெண்ணால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்ப்போம்.

Woman who ran away with daughter's fiancé: உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் டாடன் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்தவர் சப்னா. இவருக்கு திருமணமாகி ஜிதேந்திர குமார் என்ற கணவரும், ஷிவானி மகளும் உள்ளனர். சப்னாவின் மகளான ஷிவானிக்கும், ராகுல் குமார் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சப்னாவும், அவரது மகளின் வருங்கால கணவருமான ராகுல் குமாரும் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி வீட்டை விட்டு ஓடிவிட்டனர். இது இருவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மருமகனுடன் ஓடிப்போனது ஏன்?

இது தொடர்பாக சப்னாவின் கணவர் ஜிதேந்திர குமார் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சப்னாவையும், ராகுல் குமாரையும் தேடி வந்த நிலையில், சப்னாவும், ராகுல் குமாரும் இன்று டாடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தனது குடும்பத்திற்கு துரோகம் செய்யத் தேர்ந்தெடுத்தது ஏன் என்பது குறித்து மௌனம் சாதித்தார். தனது கணவர் குடித்துவிட்டு தன்னை அடிப்பதாகவும், தனது மகள் கூட தன்னுடன் அடிக்கடி சண்டையிடுவாள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அதனால்தான் இந்த நடவடிக்கையை எடுத்ததாக அவர் கூறினார்.

மகள் சொன்னது என்ன?

''என்ன நடந்தாலும் நான் ராகுல் குமாருடன் வாழ்வேன்'' என்பதில் சப்னா உறுதியாக உள்ளார். சப்னாவின் கணவர் ஜிதேந்திர குமார், தனது மனைவி தினமும் மணிக்கணக்கில் ராகுல் குமாரிடம் பேசிக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டினார். லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் நகைகளுடன் மனைவி ஓடி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். வீட்டில் இருந்த அலமாரியில் இருந்து ரூ.3.5 லட்சம் ரொக்கத்தையும், ரூ.5 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நகைகளையும் சப்னா எடுத்துச் சென்றதாக அவரது மகள் ஷிவானியும் குற்றம் சாட்டினார்.

ரூ.50 கோடிக்கு நாயா? எல்லாமே டூப்பு! பெங்களூரு ED ரெய்டில் அம்பலம்!

இறந்து விடுவேன் என மிரட்டினார் 

ஆனால் சப்னா இதை மறுத்தார். 'நான் கிளம்பும்போது என்னிடம் ஒரு மொபைல் போன் மற்றும் ரூ.200 மட்டுமே இருந்தது' என்று கூறியுள்ளார். தனது தரப்பு விளக்கத்தை சொன்ன ராகுல் குமார், சப்னா தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதால், அவருடன் ஓடிப்போக ஒப்புக்கொண்டதாகக் கூறினார். "அலிகார் பேருந்து நிறுத்தத்தில் அவளைச் சந்திக்காவிட்டால், இறந்து விடுவேன் என சப்னா சொன்னார். இதனால் நான் அவருடன் சென்றேன். முதலில் லக்னோவுக்குச் சென்றோம். அங்கிருந்து முசாபர்பூர் சென்றோம். பின்பு போலீஸ் தேடுவதை அறிந்ததால் திரும்பி வந்தோம்'' என்று கூறியுள்ளார்.

எங்களுக்கு திரும்ப வேண்டாம் 

சப்னாவின் கணவரும் அவரது மாமியார்களும் சப்னாவை "சித்திரவதை" செய்ததாகவும் ராகுல் குமார் தெரிவித்துள்ளார். ''சப்னா எங்களுக்குத் திரும்ப வேண்டாம். அவர் எடுத்துச் சென்ற பொருட்களை மட்டுமே நாங்கள் விரும்புகிறோம்" என்று சகோதரர் தினேஷ் கூறியுள்ளார். அவர் தன் மாமியார் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற பணம் மற்றும் நகைகளை திருப்பித் தர வேண்டும். அவர் செய்த செயலுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மைத்துனரும் என் மருமகளும் இன்னும் அதிர்ச்சியில் உள்ளனர்" என்று தினேஷ் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு