சட்டமன்றத்தில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில், பெண் எம்எல்ஏக்கள் குறட்டைவிட்டு தூங்கிய காட்சி தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக் என வரைலாக பரவி வருகிறது. இச்சம்பவம் உத்தரபிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் கடந்த 4 மாதத்துக்கு முன் நடந்தது. இதில், வெற்ற பெற்ற யோகி ஆதித்யநாத், முதலமைச்சராக பதவியேற்று பல்வேறு திட்டங்களை அறிவித்து, ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்த பின்னர், நேற்று சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால், அந்த மாநிலத்தின் கவர்ன ராம் நாயக் உரையாற்றினார்.

அப்போது, எதிர்க்கட்சியினர் காகித பந்தை வீசிய காட்சி, நேரடியாக ஒளிபரப்பப்பட்டு, தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வெளியானது. அப்போது, உரையாற்றிய கவர்னர் ராம்நாயக் மீதும் அந்த காகித பந்து விழுந்தது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இதை தொடர்ந்து மாநிலங்களில், ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இதையொட்டி உத்தரபிரதேச மாநிலத்திலும், ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்படும் என ஆதித்யாநாத்  தெரிவித்து  இருந்தார். அதன்படி, நேற்று ஜிஎஸ்டி மசோதாவுக்கான ஒப்புதலை அவர் அறிவித்தார்.

அந்த நேரத்திலல் எம்எல்ஏக்கள் பலர் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தனர். இந்த காட்சி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி மட்டுமின்றி, பல்வேறு வீடியோ மற்றும் புகைப்படங்களாக வெளியாகி வலம் வருகிறது. இதனால், உத்தரபிரதேச அரசியலில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.