உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான இங்கு 403 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. பிப்ரவரி10ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 11 மாவட்டங்களில் இருக்கக்கூடிய 58 சட்டபரேவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான இங்கு 403 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. பிப்ரவரி10ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன. ஆட்சியை தக்க வைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் இழந்த ஆட்சியை கைப்பற்ற அகிலேஷ்யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரசும் மாநிலத்தில் செல்வாக்கை நிரூபிக்க முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், முதல்கட்டமாக மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், பாக்பத், காஜியாபாத், புலந்த்ஷார், அலிகார், மதுரா மற்றும் ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட 58 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 7 முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தனது வாக்கை பதிவு செய்ய கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளுடன் தனது ஜனநாயக கடமையை ஆற்ற ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

 வாக்குச்சவாடிகளை பொருத்தவரையில் 1250 நபர் முதல் 1500 நபர்களுக்கு மட்டுமே வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் கடும் குளிர் நிலவினாலும் அதிகாலை முதலே வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மாநில போலீசாருடன் 50 ஆயிரம் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பதற்றமான வாக்குச்சவாடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.