பகுஜன் சமாஜ் கட்சி கலைக்கப்பட்டால் அது ஜனநாயகத்திற்கு சோகமான நாளாக இருக்கும். இந்திய ஜனநாயகத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. கட்சி வலுவடையும் என நம்புகிறோம். இந்தத் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், எங்களுக்காக உழைத்த கட்சியினருக்கும் நன்றி என தெரிவித்தார். 

பகுஜன் சமாஜ் கட்சி கலைக்கப்பட்டால் அது ஜனநாயகத்திற்கு சோகமான நாளாக இருக்கும். இந்திய ஜனநாயகத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு என அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவு

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூரில் நினைத்து பார்க்காத வெற்றியை பெற்றது. காங்கிரஸ் வசம் இருந்த பஞ்சாப்பை ஆம் ஆத்மி தட்டி தூக்கியது. இதனையடுத்து, தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அசாதுதீன் ஓவைசி வேதனை

இந்நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கூறுகையில்;- உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கடுமையாக உழைத்த போதிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. மக்கள் பாஜகவிற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அவர்களின் முடிவிற்கு மதிப்பளிக்கிறேன். பகுஜன் சமாஜ் கட்சி கலைக்கப்பட்டால் அது ஜனநாயகத்திற்கு சோகமான நாளாக இருக்கும். இந்திய ஜனநாயகத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. கட்சி வலுவடையும் என நம்புகிறோம். இந்தத் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், எங்களுக்காக உழைத்த கட்சியினருக்கும் நன்றி என தெரிவித்தார். 

இதையும் படிங்க;- 4 மாநில தேர்தல் முடிவுகள்.. 2024 மக்களவை தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் ..பிரதமர் மோடி பேச்சு..

ஓட்டு சதவீதம்

உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி சராசரியாக 0.43 சதவீத வாக்குளை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி 38 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், 37 தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.