shimoga section 144: மீண்டும் பதற்றத்தில் கர்நாடகா! ஷிவமோகாவில் ஒருவருக்கு கத்திக்குத்து 144 தடை உத்தரவு

கர்நாடக மாநிலம், ஷிவமோகாவில் சாவர்க்கர் படம் மற்றும் திப்பு சுல்தான் படம் வைப்பதில் இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவருக்கு கத்துக் குத்து விழுந்தது. இதையடுத்து 144 தடை உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர்.

Unrest in Shivamogga: clash over Veer Savarkar, Tipu Sultan posters;2 Arrested Over Stabbing Incident

கர்நாடக மாநிலம், ஷிவமோகாவில் சாவர்க்கர் படம் மற்றும் திப்பு சுல்தான் படம் வைப்பதில் இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவருக்கு கத்துக் குத்து விழுந்தது. இதையடுத்து 144 தடை உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர்.

நாட்டின் 75வது சுதந்திரதினமான நேற்று கர்நாடக மாநிலம், ஷிவமோகா நகரில் உள்ள அமீர் அகமது பகுதியில்  ஒரு தரப்பினர் சாவர்க்கர் புகைப்படம் அடங்கிய பேனரை அமைக்க முயன்றனர். அப்போது மற்றொரு தரப்பினர் மைசூர் மன்னர் திப்பு சுல்தான் படத்தை வைக்கப்போவதாகக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பில்கிஸ் பானு பலாத்காரம், கொலை வழக்கு: குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்தது குஜராத் அரசு

இரு தரப்பினருக்கும் இடையே முதலில் லேசாகத் தொடங்கிய வாக்குவாதம், பின்னர் கடுமையாக மாறி கைகலப்பு வரை சென்றது. இரு தரப்பிலும் ஏராளமானோர் குவிந்ததால் பதற்றம் அதிகரித்தது.

இதில் ஒரு தரப்பினர் திப்பு சுல்தான் போஸ்டரைக் கிழித்தனர். இதையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அப்போது இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்களும், பாஜகவினரும் சாலை அமர்ந்து  போராட்டம் நடத்தினர். சாவர்க்கர் பற்றி அவதூறாகப் பேசியவர்களைக் கைது செய்யக் கோரியும், சாவர்க்கர் படத்தை அமைக்க அனுமதி கோரியும் போராடினர்.

இலவச கல்வி, மருத்துவம் ஏழ்மையை ஒழிக்கும்: தேர்தல் இலவசங்கள் அல்ல: மோடிக்கு கெஜ்ரிவால் பதில்

இதையடுத்து அவர்களை சமாதானம் செய்து போலீஸார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். சூழல் பதற்றமாகவதை அறிந்த போலீஸார் கூடுதலாக குவிக்கப்பட்டு நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில் “ ஷிவமோகா நகரில் அமைதியைக் கொண்டு வருவதற்கு போலீஸார் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் தொடரக்கூடாது, அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

நலத்திட்டங்களை இலவசங்கள் என கொச்சைப்படுத்துவது வேதனை: பாஜகவை கிழித்த தெலங்கானா முதல்வர்

இதற்கிடையே 20வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் தனது கடையை பூட்டிவிட்டு இந்த சம்பவத்துக்குபின் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். 

இந்த சம்பவத்தில் இருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர், 10 பேரிடம் விசாரித்து வருகிறார்கள். பேனர் வைக்கும் சம்பவத்துக்கும், கத்திக்குத்துவுக்கும் தொடர்பு இருக்கிறதா, அல்லது தனிப்பட்ட பகையால் அந்த இளைஞர்குத்தப்பட்டாரா என்பது குறித்து போலீகார் விசாரித்து வருகிறார்கள்.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios