Asianet News TamilAsianet News Tamil

இந்திய தேசிய கொடி பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்..

இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்

unknown facts and secrets in the national flag of india Rya
Author
First Published Aug 14, 2024, 2:30 PM IST | Last Updated Aug 15, 2024, 8:00 AM IST

இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை நாளை கொண்டாட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு மாநில மற்றும் மத்திய அரசு கட்டிடத்தின் மீதும் இந்திய மூவர்ணக்கொடி ஏற்றப்படுகிறது. இந்திய தேசியக் கொடி குறித்த சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்திய மூவர்ணக் கொடியின் தற்போதைய வடிவம் ஜூலை 22, 1947 அன்று நடைபெற்ற அரசியலமைப்புச் சபைக் கூட்டத்தில், சுதந்திர இந்தியாவின் அதிகாரப்பூர்வக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.  ஆனால் முதல் இந்தியக் கொடி ஆகஸ்ட் 7, 1906 அன்று கல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. அதில் மதச் சின்னங்களுடன், வந்தே மாதரம் பொறிக்கப்பட்ட மலர்களும் இருந்தன. மேலே பச்சை, நடுவில் மஞ்சள், கீழே சிவப்பு என மூன்று நிறங்கள் அந்த கொடியில் இடம்பெற்றிருந்தது.

உங்கள் வீட்டில் நீங்கள் சுதந்திர தினத்தன்று கோடி ஏற்றலாமா? கூடாதா? என்ன செய்ய வேண்டும்?

ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் நடந்த இரண்டாவது சோசலிச சர்வதேச உச்சி மாநாட்டில், சில மாற்றங்களுடன் இந்தியக் கொடியின் இரண்டாவது பதிப்பு மேடம் பிகாஜி காமாவால் ஏற்றப்பட்டது. வெளிநாட்டு மண்ணில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய முதல் நபர் மேடம் காமா என்பது குறிப்பிடத்தக்கது.

கொடியின் மற்றொரு பதிப்பு 1917 இல் பாலகங்காதர திலகர் அவர்களால் ஏற்றப்பட்டது. இது சிவப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு கோடுகளுடன், யூனியன் ஜாக் - ஐக்கிய இராச்சியத்தின் கொடி - மேல் இடது மற்றும் மேல் வலதுபுறத்தில் பிறை இருந்தது.1921 இல், 4 வது வகையான கொடி பயன்படுத்தப்பட்டது. புதிய கொடியில் வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு கோடுகள் இருந்தன, வெள்ளை என்பது மத சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, பச்சை என்பது முஸ்லிம்களை குறிக்கிறது மற்றும் சிவப்பு இந்துக்களை குறிக்கிறது. நடுவில் ஒரு சக்கரம் இந்த கொடி மகாத்மா காந்தியின் தொலைநோக்கு பார்வையின்படி இருந்தது.

கொடியின் ஐந்தாவது பதிப்பு 1921 இல் உருவாக்கப்பட்டது, இது காங்கிரஸ் கமிட்டியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தக் கொடியின் மேற்புறத்தில் காவி நிறமும், நடுவில் வெள்ளை நிறமும், கீழே பச்சை நிறமும், நடுவில் சுழலும் சக்கரமும் இருந்தது.

தற்போது பயன்பாட்டில் உள்ள இந்திய தேசியக் கொடி ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த கல்வியாளரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிங்கலி வெங்கையா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ஆகஸ்ட் 15, 1947 அன்று, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, டெல்லி செங்கோட்டையின் லாஹோரி வாயிலில் தேசியக் கொடியை ஏற்றினார்.

தற்போதைய தேசியக் கொடியில் மூன்று வண்ணங்கள் உள்ளன. இதில் உள்ள காவி நிறம் தைரியம் மற்றும் தியாகம், வெள்ளை அமைதி மற்றும் பச்சை செழுமையை குறிக்கிறது. நடுவில் உள்ள அசோக் சக்கரம் வாழ்க்கையின் சுழற்சியைக் குறிக்கிறது. கொடியின் நீளம் மற்றும் அகல விகிதம் 3:2 ஆக இருக்க வேண்டும்.

இந்திய தேசியக் கொடி விலை ரூ.25 தான்.. ஆன்லைனில் வாங்குவது எப்படி?

கொடி குறியீடு: இந்திய தேசியக் கொடியானது பகல் நேரத்தில் மட்டுமே ஏற்றப்பட வேண்டும், அதற்கு மேல் கொடி அல்லது வேறு எந்த அடையாளப் பிரதிநிதித்துவமும் இருக்கக்கூடாது. கொடியானது எப்போதும் மேலே காவி நிறத்துடன் கிடைமட்ட திசையில் ஏற்றப்பட வேண்டும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அட்டாரி-வாகா எல்லையில் உள்ள இந்திய மூவர்ணக் கொடி 110 மீட்டர் நீளமும் 24 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய கொடிகளில் ஒன்றாகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios