தற்போதுள்ள வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் அந்தந்த மாநிலத்திற்கு மாநிலம் சற்று வேறுபட்டு காணப்படுகிறது. மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும்போது ஓட்டுநர் உரிமத்தை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனை எல்லாம் தடுக்கும் வகையிலும் நாடு முழுக்க ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமத்தை ஆதார் கார்டு போன்றே மக்கள் பெற்றுக்கொண்டால், அவர்கள் சந்திக்கும் சில பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

மேலும் ஒரே நபர் வேறு வேறு மாநிலத்தில் கூட ஓட்டுநர் உரிமத்தை வாங்கி வைத்துள்ளனர். அதேபோன்று ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுனர் உரிமத்தையும் வைத்துள்ளனர். இது போன்ற போலியான பல்வேறு ஓட்டுனர் உரிமத்தை பெற்றிருக்கும் நபர்களை கண்டறிந்து, இவ்வாறு வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜகவை சேர்ந்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே ஒரு பேட்டியின் போது தெரிவித்திருந்தார். இதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டுநர் உரிமங்கள் வைத்திருப்போர் குறித்த தகவல் களஞ்சியத்தை உருவாக்கி வருகிறது என்றார்.

இது அடுத்த ஆண்டு அதாவது 2019  ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க நவம்பர் 30  ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டிருந்தது.

 மத்திய அரசு புதியதாக வழங்கியுள்ள இந்த ஓட்டுநர் உரிமத்தில் மின்னணுவியல் முறையில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் அல்லது லேமினேட் செய்யப்பட்ட காடுகளாக தரப்படும். இதில் கியூ ஆர் கோடு  இடம்பெற்றிருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்தியன் யூனியன் டிரைவிங் லைசென்ஸ் என இதில் குறிப்பிடப்பட்டு, ஓட்டுனர் பெயர், முகவரி, ரத்தப்பிரிவு, உறுப்புதானம் வழங்குவதற்கான ஒப்புதல், உரிமம் வழங்கப்பட்ட தேதி, எந்த ஆண்டு வரை ஓட்டுநர் உரிமம் செல்லும் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும்.

தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த இந்த அதிரடி முடிவால் ஆதார் அட்டை போன்றே நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மக்கள் நலனில் அதிக ஆர்வம் காட்டி வரும் பாஜக அரசு பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது இன்னும் 6 மாத காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் இது போன்ற பல நல்ல முடிவுகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. மத்திய அரசின் திட்டம் மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பை பெறும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.இது குறித்த அறிவிப்பு மத்திய அரசிதழில் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது