சௌராஷ்டிரா தமிழ் சங்கம்.. தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சோம்நாத்தில் சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தை தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநிலத்தில் தமிழ்நாடு - சௌராஷ்டிரா இடையேயான பிணைப்பை இந்தத் தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து குஜராத் விராவல் நகருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி கொடியை துவக்கி வைத்தார்.
மதுரையில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைகிறது. ஏப்ரல் 14ம் தேதி மாலை 5.40 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், ஏப்ரல் 17ம் தேதி காலை 7.30 மணிக்கு விராவல் ரயில் நிலையம் சென்றடைகிறது. இன்று முதல் 23ம் தேதி வரை மதுரையில் இருந்து புறப்படும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் சிறப்பு ரயில் மட்டும் வைரவல் ரயில் நிலையத்துக்கு காலை 9 மணிக்கு சென்றடையும்.
இதையும் படிங்க..இனிமே இலவசம் கிடையாது.. ஐபிஎல் சீசனை காசு கொடுத்தா தான் பார்க்க முடியும் - முழு விபரம்
திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், சென்னை, ரேணிகுண்டா, கச்சிகுடா, நான்டெட், பூமா, அகோலா, ஜலகாவோன், நந்துர்பார், சூரத், வதோதரா, அகமதாபாத், சுரேந்திரநகர், ராஜ்கோட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. சௌராஷ்டிரா தமிழ் சங்கமம், தமிழ்நாடு மற்றும் குஜராத் இடையே வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையே பல நூற்றாண்டுகளாக பழமையான கலாச்சார தொடர்புகளை வெளிப்படுத்துகிறது என்று ட்வீட் செய்துள்ளார். சிவபெருமானின் புனித பூமியில் பல நூற்றாண்டுகள் பழமையான சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய தொடர்பை மக்கள் காண்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அமைச்சர் ராஜ்நாத் சிங் சோம்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்தார். தற்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சோம்நாத்தில் சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தை தொடங்கி வைத்தார். இதில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க..2 கோடி முக்கியம் பிகிலு.. 2024 தேர்தலுக்கு மு.க ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்! அதிமுக - பாஜகவுக்கு புது ஆப்பு