மாநிலங்களவையில் 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார். மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு மாநிலங்களவையை முடக்கியதால் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக என்.ஆர்.இளங்கோ, சண்முகம், கிரிராஜன், எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு, சுஷ்மிதா தேவ், டோலாசென், உள்ளிட்ட 19 எம்.பி.க்கள் மீது விதி எண் 256ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் இந்த வாரம் முழுவதும் மாநிலங்களவையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலங்களவை தலைவரின் இருக்கைக்கு அருகே தரையில் அமர்ந்து திமுக எம்.பி.க்கள் உட்பட 19 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மேற்கு வங்க ஆட்சி மீது கை வைப்பீங்க.? வங்கம் வந்தால் வங்கப் புலிகள் உங்களை வேட்டையாடும்.! மம்தா எச்சரிக்கை!
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 19 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முடிவு கனத்த இதயத்துடனேயே எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. இது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு பலமுறை தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனினும், விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிங்க: மாநிலங்களவையிலிருந்து திமுக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: இடைநீக்கமானோர் யார்?
அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் அமைதி காக்குமாறு அவையை நடத்திய துணைத் தலைவர் ஹர்வன்ஷ் தொடர்ந்து வலியுறுத்திய போதும், அவர்கள் அவையை நடத்த விடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாகவே, அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த முடிவு கனத்த இதயத்துடனேயே எடுக்கப்பட்டது. மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 பேர், திமுகவைச் சேர்ந்த 6 பேர், தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த 3 பேர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என 19 எம்பிக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
